15 அக்டோபர் 2020

பெறுமதி

 


கருத்ததரங்கொன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றைத் தூக்கிப் பிடித்துச் சபையோருக்குக் காட்டினார். "இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?" என அவர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின.


பின்னர் அவர் மெழுகுவர்த்தியொன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. "இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார். சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர்.


"நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர், தனது கையிலிருந்த மோதிரத்தைக் கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார். பின்னர் அதனை உயர்த்திப் பிடித்து, "இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா?" எனக் கேட்டார். அப்போதும் சபையில் இருந்த அதிகமானோர் தம் கைகளை உயர்த்தினர்.


"சரி, இப்போது நான் செய்வதைப் பாருங்கள்!" எனக் கூறிய அவர் அந்த மோதிரத்தைக் கீழே போட்டு ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார். தகர்ந்து உருக்குலைந்துபோன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர், "இனிமேலும் யாராவது இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்போதும் முன்போலவே கைகள் உயர்ந்தன.


பின்னர் அவர் சபையோரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்: "நண்பர்களே! உங்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்குவதற்காகவே நான் இதனைச் செய்தேன். பாருங்கள்! நான் இந்த மோதிரத்துக்கு என்ன ஆக்கினை செய்த போதிலும் நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறீர்கள். ஏனெனில் நான் கொடுத்த வதைகளினால் இந்த மோதிரத்தின் பெறுமதியில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை.


“இதே போன்று உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அப்படி என்ன நடந்தாலும் உங்கள் பெறுமதி ஒருபோதும் குறையாது. 


“நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விசேடமானவர். அதனை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். நேற்றைய ஏமாற்றங்கள் நாளைய கனவுகளை நசுக்கிவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்."


11 அக்டோபர் 2020

சமயோசிதம்

 ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது.


புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான்.


கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண முடிவுக்கு வந்து, நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரு அறையில் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.


நிர்வாகத்தின் முதல்வர், "சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் காகிதம் மட்டும் இயந்திரத்தால் கவர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்" என்று அங்குள்ள பொறுப்பாளர்களிடம் கூறினார்.


அதில் ஒருவர், "நாம் ஒவ்வொரு இயந்திரத்தின் பக்கத்திலும் ஒரு வேலையாளை நிறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சோப்பாக பரிசோதித்து, பின் சோப்பு இல்லாமல் வரும் வெறும் காகிதத்தை தனியாக நீக்கிவிட வேண்டும்" என்று ஆலோசனைக் கூறினார்.


மற்றொருவர்,"நாம் அவர்களுக்கு அதற்காகவே தனி சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும். இது வேலைக்காகாது.

வேண்டுமென்றால் இவ்வாறு செய்யலாம், சோப்பின் எடையைக் கணக்கிடும் ஒரு இயந்திரத்தை, நம் இயந்திரங்களோடு இணைத்து விடுவோம். அது எடையைக் கணக்கிட்டு, எடையில்லாமல் வரும் வெறும் காகிதத்தை அகற்றிவிடும்" என்று கூறினார்.


அங்குள்ள அனைவரும் அவரின் ஆலோசனையைக் கேட்டு கைத்தட்டினர், முதல்வரை தவிர.


அவருக்கோ இவர்களின் யோசனை திருப்தி அளிக்கவில்லை.

அச்சமயம் அங்கு கதவு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், இவர்களின் பேச்சைக் கண்டு சிரித்தான். அதனை கவனித்த முதல்வர் அவனை அழைத்தார்.


"தம்பி, ஏனப்பா இவர்களை பார்த்து சிரிக்கின்றாய்?!" என்று கேட்டார்.


அதற்கு அச்சிறுவன்,"நான் அவர்களை பார்த்து சிரிக்கவில்லை. உங்களை நினைத்துதான் சிரித்தேன்" என்றான்.


சிறிது குழப்பத்துடன் "அதற்கு என்ன காரணமென்று நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று முதல்வர் கேட்டார்.


"நீங்கள், இவர்களையெல்லாம் எப்படிதான் இந்த கம்பெனில உயர் பதவில வச்சிங்களோ... அத நினைச்சுதான் சிரிச்சேன்" என்று அச்சிறுவன் கூறினான்.


அங்கிருந்த அனைவருக்கும் அச்சிறுவன் மேல் கோபம் வந்தது, முதல்வரை தவிர.


"இங்க வேலை பாக்குறவங்களுக்கு டீ கொடுக்குற சின்ன பையன் நீ!...

நீ எங்கள பாத்து ஏளனமா பேசுற. இவன உடனே கம்பெனிய விட்டு வெளிய அனுப்புங்க சார்..." என்று அனைவரும் சத்தமிட ஆரம்பித்தனர்.


முதல்வர், அச்சிறுவனிடம் "ஏனப்பா அவ்வாறு கூறுகிறாய்?" என்று கேட்டார்.


"இவர்கள் இருவர் கூறி ஆலோசனையையும், அதற்கு இங்குள்ளவர்களின் கைத்தட்டலையும் பார்த்தேன். அதனால் தான் அவ்வாறு கூறினேன்" என்றான் அச்சிறுவன்.


அதை கேட்ட அனைவரும், "நீ! என்ன எங்களவிட பெரிய அறிவாளியா?..........

யோசனை சொல்லவந்துட்டான். போ போய் டீ கொடுக்குற வேலை மட்டும் பாரு" என்று அவனிடம் சத்தமிட்டனர்.


உடனே முதல்வர், "அனைவரும் அமைதியாக இருங்கள்.

தம்பி நீ சொல்ல வந்தத சொல்லுப்பா!" என்று கூறினார்.


"அந்த சோப்பு எல்லாம் கவர் பண்ணி வர்ற வழியில அதற்கு நேரா ஒரு ஃபேனை மட்டும் ஓடவிடுங்கள். சோப்பு இல்லாம வர்ற வெறும் கவர் மட்டும் காத்துக்கு பறந்து விடும். இதற்கு ஏன் தேவையற்ற வேலையாட்களையும், இயந்திரத்தையும் வீண் செலவு செய்து வைக்க வேண்டும்" என்று கூறினான்.


பின் அனைவரும் ஒன்றும் பேசவில்லை. முதல்வர் அவரை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.


அன்றைய தேதியிலிருந்து சரியாக எட்டு வருடங்கள் கழித்து, அங்கிருந்த பொறுப்பாளர்களும் மற்றும் அந்த சிறுவனும் ஒரு நாள் மீண்டும் அந்த கம்பெனியில் காலடி எடுத்து வைத்தனர்.


அதனை தனக்குறிய அறையில் இருந்து கவனித்த நிர்வாகத்தின் முதல்வர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறிது பதற்றம் அடைந்தார்.


காரணம்,

பொறுப்பாளர்கள் அனைவரும் நிர்வாக பொறுப்பாளர்களாகவே அந்த கம்பெனியினுள் நுழைந்தனர்.


அந்த சிறுவனோ, ஒரு மிகப் பெரிய கம்பெனியின் முதல்வரே எழுந்து வணங்கும் அளவிற்கு உயர்ந்தான்.


அச்சிறுவனின் பெயர் "#கிங்மார்டின்"!!

09 அக்டோபர் 2020

யாரை நம்புவது....??

 
1.உங்களுக்குள் இல்லாதது என்ன?
2.சொல்புத்தி சுயபுத்தி இரண்டுமே நமக்கு உண்டு
3.உங்களுக்குள் திறமை உண்டு என்பதை 
யார் நிருபித்தது??
4.பிறக்கும்போதே பணக்காரன் வெற்றியாளன் என்று
யாரும் நிர்ணயிக்கவில்லை
5.அனைவரையும் பணக்காரனாக கடவுள்
படைக்கவுமில்லை
6.எப்படி சாத்தியம் இது??
7.தனக்காக ஒரு துறையை தேர்ந்தெடுத்து 
அதில் முயற்சியும் பயற்சியும் செய்தவர்கள் தான் இன்று வெற்றியாளர்கள்
8.உங்களுக்கு நீங்கள்தான் நண்பன்
9.ஆறுதலுக்கும் அறிவுரைக்கும் பக்குவத்திற்கும்
நீங்களே போதுமானவர்கள்
10.அறிவுரையை கேட்டு திருந்துபவரும் உண்டு
திரும்பவும் தவறு செய்பவர்களும் உண்டு
11.உங்கள் மனசாட்சி அவனே உங்கள் உற்ற தோழன்
12.இதுவரை நடந்த தவறுகளை நினைத்துப்பாருங்கள்
13.நடந்த தவறுகளுக்கு 99%நாம்தாம் பொறுப்பாளி
14.ஒப்புக்கொள்ள முடியுமா??? முடியாது ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம்
15.தன்நிலை இது நான்தான் என்று எப்போது உணர்கிறோமோ
அன்றுதான் 
நாம் முழுமனிதனாகிறோம்
16.உங்களை நம்புங்கள் அதுதான் உங்களின் 
முதல் வெற்றி??

08 அக்டோபர் 2020

வாழ்க்கை

 



மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம். 


விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம்.


அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும்.


அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது. 


கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான்.


சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான்.


நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம். 


அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும்.


நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!


திறமை

 



மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம். 


விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம்.


அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும்.


அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது. 


கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான்.


சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான்.


நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம். 


அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும்.


நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!


07 அக்டோபர் 2020

கால நேரம் என்பது

 

   

  

     

    

   

  

    

"காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழ மொழிகள் நாம் அறிந்ததே. 


வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள். 


அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள்.


காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனை யாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது. 


கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது. 


"நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்  என்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப் படுகிறது. 


உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.


உங்கள் நேரம் உங்களுக்காகவே.அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள்.


உங்கள் நேரத்தை, உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்..


எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப் போடும் பழக்கம் நல்லது அல்ல.


தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது.மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்.


நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டம் இடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்.


நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும்.கால விரயத்தைத் தடுக்கலாம். 


மறுநாள் வேலைக்கு முதல் நாளே திட்டம் போடுங்கள்.

எந்த செயலையும் செய்ய ஒரு முறைக்கு, இருமுறை யோசித்து முடிவு எடுங்கள்..


எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் உறுதியாய் இருங்கள்..

06 அக்டோபர் 2020

தன்னம்பிக்கை பதிவு.




*நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்.*
*வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி.*
*ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடை பிடிக்க வேண்டி உள்ளது.* 
*இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது.* 
*ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை.* 
*காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இது வரை இல்லை என்பது தான் சத்தியம்.* 
*நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக் கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பது தான்.* 
*மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக் கூடியது அன்று.* 
*நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலையான மகிழ்ச்சி.* 
*மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.* 
*நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த  சரக்கிற்கு பெருத்த  லாபம் கிடைக்கப் போவதாக கற்பனை செய்து கொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார்.* 
*ஆனால் எதிர்பாராத விதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறி விட, அவர் எதிர் பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்து விட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை.* 
*ஆனாலும் அவர் தாம் எதிர் பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு?* 
*கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரே தானே பொறுப்பாக முடியும்.* 
*ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில் தானே இருக்கிறது.* 
*மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!* 
*மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது.* 
*அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியம்.*
*ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள்.* 
*இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.*
*வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித் தீவிலிருந்து  ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை.* 
*அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும்.*
*அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும் தானே?*
*இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை.* 
*உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்து விட்டால் மேற் கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்து கொண்டே போக வேண்டியது தான் இல்லையா?*
*அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம் முன் பரந்து விரியும்.* 
*அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம்.*
*நல்ல வாழ்த்துகளைப் பெற்றுத் தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப் பெரும் வரப் பிரசாதம்.*
*அதை அனுபவிக்கப் பழகி விட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடி விடும்.* 
*வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவது தான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி.*
*நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும் போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகி விடும்.* 
*குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.* 
*நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக் கொண்டே வரும் போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழி நடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?*
*பெற்ற சிறிய வெற்றியையும் மனம் மகிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா....* 
*அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே.* 
*ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம்.*
*அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே.*
*இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத் தானே அர்த்தமாகிறது.*


05 அக்டோபர் 2020

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂


*சிக்கல் இல்லாத* 

*மனிதன்* 

*உலகில் இல்லை.*


*சிக்கலை கண்டு* 

*மிரளாமல்,*

*சிக்கலின் காரணத்*

*தன்மை, ஆராய்.*


*திறக்க முடியாத* 

*பூட்டே கிடையாது.* 

*சரியான சாவியைக்* 

*கண்டுபிடிக்காதவர்கள்*

*தான் அதிகம் உண்டு.*


*தீர்க்க முடியாத துன்பம்*

*எதுவும் கிடையாது.* 

*தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.*


*இன்று கவலையாகத்*

*தெரியாவது,* 

*நாளை மகிழ்வாய்*

*மாறும், மலரும்.*


*எந்தக் கவலையையும்* 

*ஆராய்ந்து சரியான*

*தீர்வைக் காண்பதே*

*வாழ்வின் உன்னதம்.*


🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️

       *.*

 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன்

*"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று,


🍁அறிஞர் சொன்னார்,*

*உன் அறையை செக் பண்ணு, என்று


🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது


மேற் கூரை சொன்னது*

உன் எண்ணங்களை உயர்வாக வை என்று


🍃காத்தாடி சொன்னது,*

என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று


*🍃கடிகாரம் சொன்னது,

 நேரத்தை மதிக்கனும் என்று


*🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள் 

என்று.


🍃மணிபர்ஸ் சொன்னது ,*

வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று


🍃கண்ணாடி சொன்னது,*

உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று .


🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று 

என்று


*🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று


தரை சொன்னது,*

எப்பவும் கீழே பணிவாக இரு என்று


🍃படிக்கட்டு சொன்னது,*

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை 

என்று



*இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*


03 அக்டோபர் 2020

விவேகம்


*அறிவான வேகம்*

*விவேகம்.*


*எண்ணித் துணிவதும்..!*

*சிந்தித்துத் தெளிவதும்..!*

*முனைப்பாய் செய்வதும்..!*

*விவேகம்.*


*வெற்றியோ தோல்வியோ* 

*இறுதி வரை போராடிச்*

*செயல் ஆற்றுவதும்*

*விவேகம்*


*துணிந்த பிறகு மீண்டும்,*

*பின் வாங்குவதையோ,*

*இழுக்கு என்று மனதுக்குள்* 

*நினைப்பதும்.*

*விவேகம்*


*விவேகம் உள்ளவர்கள்*

*விவேகி.*


*செயலிலே வேகம்,* 

*சிந்தையிலே விவேகம்.*

*சீரிய கட்டுப்பாட்டிற்குள்*

*செயல்படுவார்கள்.*

*விவேகி*


*விவேகியிடம்*

*பகுத்தறிவு, புத்திக் கூர்மை,*

*மதிநுட்பம், ஞானம்*

*அறிவு, சாமர்த்தியம்,*

*ஒருசேர இருக்கும்*


*வாழ்வில் விவேகம்* 

*தீமையைக் குறைத்து*

*நன்மையை நாடுவது.*


*கடலின் ஆழத்தில்* 

*முத்தைக் கண்டு பிடிப்பது*

*பிரச்சனைகளின்*

*ஆழத்தில் முடிவின்*

*தீர்வைக் கண்டு பிடிப்பது*

*விவேகம்.*


*விவேகம்*

*ஏட்டுச் சுரைக்காய் அல்ல.*

*வாழ்வில் பல*

*நெருக்கடிகளைச் சந்தித்து* *எதிர்கொண்டு கடந்து*

*வந்தவர்களே*

*விவேகிகள்.*


*ஆம்.,*


*இருள் தடுமாறச்*

*செய்கிறது.* 


*விவேக வெளிச்சம்*

*உற்சாகம் தருகிறது.*


*அபரிதமான* 

*நம்பிக்கையைத்*

*தருவதும்*


*விடியலைக்*

*காண்பதும்*

*விவேகம்.*

       *குறுஞ் சிந்தனை.*

வாழ்க_வளமுடன்.

 வயதை' வைத்து மட்டுமே அனுபவத்தை கணக்கிடாதீர்..!பண்படுத்திய 'வலிகளை' வைத்தும் அனுபவத்தை கணக்கிடுங்கள்..!!*



தோல்விகளும்,துரோகங்களும் கடைசியாக கற்றுக்கொடுப்பது...நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்று..!!*


*கடினமான செயலின் சரியான பெயர் தான் 'சாதனை'..!சாதனையின் தவறான விளக்கம் தான் 'கடினம்'..!!*


*பலர் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, திறமை இல்லாமல் அல்ல... நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்..!!*


*ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..!நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!!*


*வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை..!ஆனால், அவர்கள் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள்..!!*


*தெரிந்த ஒன்றை செய்து வெற்றி காண்பதை விட... தெரியாத ஒன்றை செய்து தோல்வி காண்பது... "நல்ல பாடம்"..!!*


*மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது சுகமாக தான் இருக்கும்... ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...*


*உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுங்கள்..*


*உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!வாழ்க_வளமுடன்.

முக்கியமானவன்


☮தான் மிக முக்கியமானவன்' என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்து விடும்?
☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும்
வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது.
☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம்.
☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
☮☮☮☮☮☮☮☮☮☮☮
 
நல்லதே நடக்கும்

நாம்

 🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞


🌌தெரியாது என்பதே எப்போதும் பிரச்சனை தராத ஆகச் சிறந்த பதிலாக இருக்கிறது.


🌌விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுங்கள். உங்களை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும் உங்களை சுற்றி இருப்பவர்களை மகழ்விக்கவும் உதவும்.


🌌நாம் உறவுக்குள் வெளிப் படையாக இருந்தால் உறவு முறிந்து விடுகிறது. உறவு இல்லாதவர்களிடம் வெளிப் படையாக இருந்தால் உறவு உருவாகி விடுகிறது.


🌌நூறு வருஷம் வாழறது முக்கியமில்லை. அதுல எத்தனை வருஷம் சந்தோஷமா வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.


🌌பிறர் மனம் மகிழ நாம் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாக வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கைப் பாதையை இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக் கூடாது.