ஒன்பதாம் திகதி
ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா? ராஜபக்சக்களைப் போல ரணில் விக்கிரமசிங்க மந்திரம்,பில்லிசூனியம்,எண்ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. ஆனால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு மந்திரம்,மாயம்,பில்லிசூனியம்,எண் ஜோதிடம் என்பவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலுக்குள் இருந்து வருகிறார்கள். அக்கூட்டு உளவியல் காரணமாகத்தான் மே மாதத்தில் இருந்து தொடங்கி ஜூலை மாதம் வரையிலுமான ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாட்களாக காணப்பட்டன.எனவே அந்த நம்பிக்கையை முறியடிக்க வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. அவர் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறார்.கடந்த ஒன்பதாந் திகதி ரணில் அகற்றப்படவில்லை,மாறாக கோட்டா கோகம கிராமம் காலி முகத்திடலில் இருந்து வெளியேறியது. தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளால் அரகலய பெருமளவுக்கு செயலிழந்து விட்டது.இதுவரை எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது போராடும் தரப்புக்கே தெளிவில்லாமல் இருக்கிறது.ஒரு மையத்திலிருந்து தகவல்க...