27 ஜூலை 2021

கணிணி வன் பொருள் மென்பொருள்


                                           

                                         கணிணி வன் பொருள் மென்பொருள்                 

Bios (Basic input &output system)

Bios ஆனது ஒரு கணிணியின்  device  களின்  தொழிற்பாட்டினை  முழுமையாக   இயக்குகின்ற 

செயன்முறை      மெண்பொருளாகும்.


Advance

Cpu configuration,                                                                                                                                                                      CPU   (central prosessering unit)

இது ஒரு கணிணியின் தொழில்பாட்டு மையமான  Cpu இன் தொழிற்படுகின்ற சகல அமைப்பினையும் இது கொண்டிருக்கிறது.

Chipset Configuration,

                                              இதானது video card, Audio card, video  cip or audio chip, Ram card  ஏனைய அணைத்து Cip களையும் அவைகளின் அணைத்து  செட்டின்ஸ்களையும்    இச்  cip  Set Configuration கொண்டுள்ளது.


IDe Configuration

                                      இதானது ஒரு கணிணியின்  Hard drive,CD rom ஆகியவற்றின்  தொழில் பாட்டினை   கண்பிக்கக்கூடியது, இவை   IDE/SATA  ஆகிய இரு தொழிற்பாட்டினை உள்ளடக்கி இருக்கும்  இதில் எமக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொள்ல முடியும்.


Configure Super IO  Chipset.

                                                     இதனது ஒரு       mother bord இன்    சகல  PORT களின்      power supply யுடன் ஏனைய அமைப்புகளை கொண்டிருக்கிறது.


USB  Configuration

                                  இதானது USB Divaice களின் தொழிற்பாட்டினை காட்டக் கூடியது   இவற்றில்  எமக்குத் தேவையானவறு      settings change களை ஏற்படுத்திக் கொள்ல முடியும்.


Hardware health event monitoring

                                         கணிணியின்     mother board இன் உஷ்ன அளவையும்  அதனை ஒரு நிலையில் பேணக்கூடிய  கணிணி  ஃபேன்,வேகம் ஆகியவற்றிணையும்  mother bord  

இன்  மின்சார   தொழிற்பாட்டினையும்  காட்டக்கூடியது.




23 ஜூலை 2021

கவிக்கோ வரிகள்


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’ ? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?


கவிக்கோ வரிகள்

22 ஜூலை 2021

மு; மேத்தா


 



                               கண்ணீர்ப் பூக்கள்  

எந்த தேவதையாலும் அவன் 

ஆசிர்வதிக்கப்படவில்லை 

ஆனால் 

எல்லாச் சாத்தான்களாலும் 

இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!


எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை 

ஆனால் 

எல்லாப் புயல்களோடும் அவன் 

போராடியிருக்கிறான்!


மகிழ்ச்சி மலர்களை அவனால் 

பறிக்க முடியவில்லை 

அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம் 

கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.


என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை 


சோகச் சிலுவைகளை நெஞ்சில் 

சுமந்து கொண்டு 

அவன் நடக்கிறான் 

அழுகைக்குப் பிறகும் ஓர் 

அணிவகுப்பு நடத்துகிறான்!


சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது 

கவிப்பயணம் காலசைக்கிறது 

துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!

பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழமுடியா வீழ்ச்சிகள்!


மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!


ஆடுகின்ற பேய்மனதில் 

ஆயிரமாம் ஆசைகள் 

ஆயிரமாம் ஆசைகட்கு

அனுதினமும் பூசைகள் !


சூடுகின்ற மாலைகளோ 

தோள்வலிக்கும் தோல்விகள் 

தோள்வலிக்கும் தோல்விகள் நான் 

தொடங்கிவைத்த வேள்விகள்!


காலமெனும் தாளிலொரு 

கதையெழுத வந்தவன் 

கதையெழுத வந்ததனால் 

கனவுகளில் வெந்தவன்!


ஓலமிடும் சிந்தனையால் 

உறங்குவதை விட்டவன் 

உறங்குவதை விட்டதனால் 

உடல் சிதைந்து கெட்டவன்!


மன்னவரின் சபைகள்தமை 

மயங்க வைத்த பாவலன் 

மயங்கவைத்த வேளையிலும் 

மயங்கிவைத்த கோவலன்!


மின்னும் விழிப் பொற்குளத்தில் 

மீன்பிடிக்கப் போனவன் 

மீன்பிடிக்கப் போனதனால் 

வேதனைக்குள் ளானவன் !


ஈரவிழிக் காவியங்கள் 

எழுதி வெளி யிட்டவன் 

எழுதி வெளி யிட்டதனால்  

இதயங்களைத் தொட்டவன்!


ஓரவிழிப் பார்வைகளின் 

ஊர்வலத்தில் சென்றவன் 

ஊர்வலங்கள் சென்றபோது 

ஒதுங்கிவந்து நின்றவன்!


பாயும் நதி மீதிலொரு 

படகினை நான் ஓட்டினேன் 

படகை நன்கு ஓட்டியதால் 

பரிசுகளை ஈட்டினேன்!


ஆய பல சுமைப் பரிசை 

அப்படகில் ஏற்றினேன் 

அப்படகு கவிழ்ந்ததனால் 

அலைநடுவே மாட்டினேன்!



வரங்கொடுக்கும் தேவதைகள் 

வந்தபோது தூங்கினேன் 

வந்தபோது தூங்கிவிட்டு 

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!


கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக் 

கைகழுவி வீசினேன் 

கைகழுவி வீசிவிட்டுக் 

காலமெல்லாம் பேசினேன்!


புல்லர்களின் மனக்குகையில் 

புனித விதை விதைத்தவன் 

புனித விதை விதைத்தபோது 

புதை மணலை மிதித்தவன்!


செல்லரித்த மானுடத்தைச் 

சீர்திருத்தப் பாடினேன் 

சீர்திருத்தப் பாடியதால் 

பேரெதிர்ப்பைத் தேடினேன்!



அற்பர்களின் சந்தையிலே 

அன்பு மலர் விற்றவன் 

அன்பு மலர் விற்றதற்குத் 

துன்ப விலை பெற்றவன்!


முட்புதரில் நட்பு மலர் 

முளைக்குமென்று நம்பினேன் 

முளைத்து வந்த பாம்புகளே 

வளைத்த போது  வெம்பினேன்!


நெஞ்சுவக்கும் மலர் பறிக்க 

நெருப்பினில் கை விட்டவன் 

நெருப்பினில் கை விட்டதனால் 

நினைவுகளைச் சுட்டவன்!


வஞ்சி மலர் ஊமை மன 

மாளிகையின் அதிபதி!

மாளிகையின் அதிபதிக்கு 

மனதில் இல்லை நிம்மதி!



சோலைவழி வீதிகளில் 

சுகமளிக்கும் பார்வைகள் 

சுகமளிக்கும் பார்வைகள் என் 

சுதந்திரத்தின் போர்வைகள்!


பாலைவன மணல் வெளியில் 

பாடகனின் யாத்திரை 

பாடகனின் யாத்திரையே 

பசித்தவர்க்கு மாத்திரை!


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!

                   

18 ஜூலை 2021

மொஹிதீன் பெக்


                                                                 

மொஹிதீன் பெக் என்ற பெயர் கேட்டால்  எமது காதுகளில் ஒலிப்பது ;புத்தங்சரணங் கச்சாமி:

என்ற சிங்கள மொழிப் பாடல்  அவர் ஒரு இஸ்லாமியர்  இப்படியான பௌத்த   மத பாடல்கள்

பாடுவது முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும் அவர்தம் பாடல்கள்

காதுகளில் கேட்க்கும்போது தம்மையும் மறந்து அந்த குரலில்    லயித்து விடுவதுண்டு,

இலங்கையை பொருத்தவரை சிங்கள மக்கள்  அவரை தமது மனதில் உயரிய இடத்தில் இன்னும்

வைத்திருப்பதற்கு காரணம்   அந்த கம்பீரமான குரலும்  தமக்கே உரித்தான உச்சஸ்தாயில் பாடும்

திறனும்தான்.  ;செமவிட பவசனு முவின்  ஒபே  புத்தங்  சரணங் கச்சாமீ; என்ற பாடல் பதிவுக்காக

பெக் அவர்களை தேர்வு செய்ததில் ஒரு சுவாரசியமான  கதை உண்டு ( இந்தப்பாடல் ஒரு பிரபலமான ஹிந்திப்பாடலின் மெட்டில் அமைந்தது என்பது  வேரு கதை,)  இப் பாடலை பாட

முதலில் தேர்வு செய்யப்பட்டவர்  பெக்  பின்பு இது புத்தரின் மகிமைபறறிய பாடல் என்பதால்

ஒரு முஸ்லிம்  பாடுவதில் குழுவில்  சிலருக்கு  பிடிக்காததால்  வேரு பாடகர் இந்தியாவிற்கு

அழைத்து செல்லப்பட்டுள்ளார் (அப்போது ஒலிப்பதிவு கூடங்கள் இலங்கையில் இல்லாத காலம்)

பாடலுக்கு அந்தப்பாடகரின்  குரல் பொருந்தாத காரணத்தால் மீண்டும் மொகிதீன் பெக்

இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு  பாட வைக்கப்பட்டுள்லார். அந்தப்பாடலே

இன்ரும் என்ரும்  மொகிதீன் பெக்  என்ற பெயர் நிலைக்க காரணமானது, அது மட்டுமல்ல

அவரின்  அதிகமான பாடல்கள்    இன்னும் தலைமுறை தாண்டியும் ரசிக்கப்படுகிறது   உதாரணமாக    ;கோடுகேலி சொயாலா, படுகன்னை விகுனன்னை பொலடை யன்னே:

போன்ற  நூற்றுக்கணக்கான பாடல்களைச்சொல்லலாம்,மொகிதீன் பெக்  தமிழ் இஸ்லாமியப் படல்கலும்,உருதுப்பாடல்கலும் பாடியுள்லார்.

                                                                   கொலம்பியா இசைதட்டில் இவர் பாடிய  முதற்பாடல்

;கருணா முகுதே; 1936, சிங்கள   மொழியில் வெளியாகிய  இரண்டாம் திரைப்படமன  ;அசோகமாலா; இப்படத்தில்  நாங்கு  பாடல்கள்  பாடியதுடன் ,ஒரு  பாடல் காட்ச்சியில் இவரே நடித்துமுள்ளார்,1947.   பின்பு 1950 கலிள்  பிரபலமான சிங்களத் திரைப்பட

பின்னனிப் பாடகராகத்திகழ்ந்தார் 1953  ஆம் ஆண்டில் சுஜாதா திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து  பாடினார்,1955 ஆம் ஆண்டு; செட சுலங்க; படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினார், இலங்கை வானொலியில் நாங்கு மொழிப் பாடகராக

இவர்  திகழ்ந்ததாகவும் அறியக் கிடைக்கிறது, இன்னும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட

ஓரிரு தமிழ் திரைப்படங்களிலும் பின்னனிபாடியுல்ளார்,

                                                                        இலங்கையின் முதலாவது சுதந்திர தின வைபவம்,1974 பொதுநலவாய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார், இவரது  முக்கியத்துவம் காரணமாக 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர்  எஸ்.டப்லிவ்,ஆர்.டீ,பண்டாரநாயக  இலங்கை குடியுரிமை வழங்கி கவுரவித்தார்.

50 வருடங்கலுக்கும் மேற்பட்ட அவரது இசை பயணத்தில்  அதிகமான இஸ்லாமிய பாடல்க்லும்

பாடியுள்ளார் அவற்றில் ;தீனெனும் இஸ்லாம் நெறிதனை தாங்கி;/ ; இறையோணின் சுடரான நபி

நாதரே; போன்ற இன்னும் அதிகமான பாடல்கலும் பாடியுள்ளார், அரை நூற்றாண்டுகால இசை வாழ்வில்  450 சிங்கள மொழிப் படங்களிலும் 9500க்கும் மேற்பட்ட பாடல்களூம் பாடியுள்ளார்

அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களுக்கு இலங்கை அரசு அதன் உயரிய விருதான   ; கலா சூரி;

என்ற விருதையும் தந்து கௌரவித்தது 1983,1987.

                                                                    இவ்வளவு திறமைகளையும் பெருமைகளையும் கொண்ட அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களின் பெற்றோர்,இந்தியாவில்  உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட, காவல் துறையில் அதிகாரியாக  பணிபுறிந்த கரீம் பெக்,பீஜான் பீவி, இவருடைய உடன் பிறப்புக்கள் 13பேர்  இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு விபத்தில் கொழும்பில் மரணமான போது 

தம் பெற்றொருடன்  இலங்கை வந்த இவர்  இங்கே தங்கிவிடுகிறார்  தனது 18 வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து தொழில் புறிந்த இவரை  பிரபல இசை கலைஞர் 

கௌஸ் மாஸ்ட்டர்  அவர்கள் இனம் கண்டு உற்சாகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார்,

இவரது மனைவியின் பெயர் சகீனா பெக்  இவருக்கு 3 பிள்ளைகள் அவர்களும் பிரபலமான பாடகர்கள்.

                                                தனது 13 வது வயதில் பாடத் தொடங்கியவர் தனது72வது வயதில்       1991 நவம்பர் 4ம் திகதி  மரணமடைந்தார்.

அவருடைய வசனங்கள்;

         [  ;நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன் நான் புத்தர் பற்றிய பாடல்களை பாடுவதையே

             விரும்புகிறேன், எந்த மதமானாலும் நாமெல்லோரும் சகோதரர்கள், இந்த நாட்டு        மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாக   

கருதுகிறேன்;]

                 இந்த நாடு அவருக்கு என்ன செய்தது ஒரு தபால் தலை வெளியீட்டை தவிற