கோவிட் மக்கள் தொகை குறைப்பா?
உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு காலம் பல அறிஞர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து கண்டறிந்ததுதான் கொரோனா வைரஸ் என்றும் அதனைத் தொடர்ந்து வருகிற தடுப்பூசி என்றும் உலக அரசியல் அறிந்த அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இது குறித்த கட்டுரை ஆங்கில நாளேடான சவரன் இன்டிபென்டன்ட் (Soverign Independent) எனும் நாளிதழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இது நம்பும்படியாக உள்ளதா என்று கேட்டால் உலகில் காணும் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை என்றே சொல்லலாம். மனித எதிரிகள் கண்டறிந்த செயற்கையான வைரஸ்தான் இது என்பதற்கு மனிதநேயமுள்ள மருத்துவர்கள் கூறும் சான்று என்னவெனில், இயற்கையான தொற்றுநோய் என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் தோன்றி அந்த நாட்டோடு முடிந்துவிடும். மற்ற நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குளிர்ப்பிரதேசங்களில் தோன்றினால் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் அது அழிந...