இடுகைகள்

அக்டோபர் 7, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கால நேரம் என்பது

                                "காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழ மொழிகள் நாம் அறிந்ததே.  வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள்.  அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள். காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனை யாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது.  கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.  "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்  என்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப் படுகிறது.  உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொ...