18 ஜூலை 2021

மொஹிதீன் பெக்


                                                                 

மொஹிதீன் பெக் என்ற பெயர் கேட்டால்  எமது காதுகளில் ஒலிப்பது ;புத்தங்சரணங் கச்சாமி:

என்ற சிங்கள மொழிப் பாடல்  அவர் ஒரு இஸ்லாமியர்  இப்படியான பௌத்த   மத பாடல்கள்

பாடுவது முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும் அவர்தம் பாடல்கள்

காதுகளில் கேட்க்கும்போது தம்மையும் மறந்து அந்த குரலில்    லயித்து விடுவதுண்டு,

இலங்கையை பொருத்தவரை சிங்கள மக்கள்  அவரை தமது மனதில் உயரிய இடத்தில் இன்னும்

வைத்திருப்பதற்கு காரணம்   அந்த கம்பீரமான குரலும்  தமக்கே உரித்தான உச்சஸ்தாயில் பாடும்

திறனும்தான்.  ;செமவிட பவசனு முவின்  ஒபே  புத்தங்  சரணங் கச்சாமீ; என்ற பாடல் பதிவுக்காக

பெக் அவர்களை தேர்வு செய்ததில் ஒரு சுவாரசியமான  கதை உண்டு ( இந்தப்பாடல் ஒரு பிரபலமான ஹிந்திப்பாடலின் மெட்டில் அமைந்தது என்பது  வேரு கதை,)  இப் பாடலை பாட

முதலில் தேர்வு செய்யப்பட்டவர்  பெக்  பின்பு இது புத்தரின் மகிமைபறறிய பாடல் என்பதால்

ஒரு முஸ்லிம்  பாடுவதில் குழுவில்  சிலருக்கு  பிடிக்காததால்  வேரு பாடகர் இந்தியாவிற்கு

அழைத்து செல்லப்பட்டுள்ளார் (அப்போது ஒலிப்பதிவு கூடங்கள் இலங்கையில் இல்லாத காலம்)

பாடலுக்கு அந்தப்பாடகரின்  குரல் பொருந்தாத காரணத்தால் மீண்டும் மொகிதீன் பெக்

இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு  பாட வைக்கப்பட்டுள்லார். அந்தப்பாடலே

இன்ரும் என்ரும்  மொகிதீன் பெக்  என்ற பெயர் நிலைக்க காரணமானது, அது மட்டுமல்ல

அவரின்  அதிகமான பாடல்கள்    இன்னும் தலைமுறை தாண்டியும் ரசிக்கப்படுகிறது   உதாரணமாக    ;கோடுகேலி சொயாலா, படுகன்னை விகுனன்னை பொலடை யன்னே:

போன்ற  நூற்றுக்கணக்கான பாடல்களைச்சொல்லலாம்,மொகிதீன் பெக்  தமிழ் இஸ்லாமியப் படல்கலும்,உருதுப்பாடல்கலும் பாடியுள்லார்.

                                                                   கொலம்பியா இசைதட்டில் இவர் பாடிய  முதற்பாடல்

;கருணா முகுதே; 1936, சிங்கள   மொழியில் வெளியாகிய  இரண்டாம் திரைப்படமன  ;அசோகமாலா; இப்படத்தில்  நாங்கு  பாடல்கள்  பாடியதுடன் ,ஒரு  பாடல் காட்ச்சியில் இவரே நடித்துமுள்ளார்,1947.   பின்பு 1950 கலிள்  பிரபலமான சிங்களத் திரைப்பட

பின்னனிப் பாடகராகத்திகழ்ந்தார் 1953  ஆம் ஆண்டில் சுஜாதா திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து  பாடினார்,1955 ஆம் ஆண்டு; செட சுலங்க; படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினார், இலங்கை வானொலியில் நாங்கு மொழிப் பாடகராக

இவர்  திகழ்ந்ததாகவும் அறியக் கிடைக்கிறது, இன்னும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட

ஓரிரு தமிழ் திரைப்படங்களிலும் பின்னனிபாடியுல்ளார்,

                                                                        இலங்கையின் முதலாவது சுதந்திர தின வைபவம்,1974 பொதுநலவாய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார், இவரது  முக்கியத்துவம் காரணமாக 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர்  எஸ்.டப்லிவ்,ஆர்.டீ,பண்டாரநாயக  இலங்கை குடியுரிமை வழங்கி கவுரவித்தார்.

50 வருடங்கலுக்கும் மேற்பட்ட அவரது இசை பயணத்தில்  அதிகமான இஸ்லாமிய பாடல்க்லும்

பாடியுள்ளார் அவற்றில் ;தீனெனும் இஸ்லாம் நெறிதனை தாங்கி;/ ; இறையோணின் சுடரான நபி

நாதரே; போன்ற இன்னும் அதிகமான பாடல்கலும் பாடியுள்ளார், அரை நூற்றாண்டுகால இசை வாழ்வில்  450 சிங்கள மொழிப் படங்களிலும் 9500க்கும் மேற்பட்ட பாடல்களூம் பாடியுள்ளார்

அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களுக்கு இலங்கை அரசு அதன் உயரிய விருதான   ; கலா சூரி;

என்ற விருதையும் தந்து கௌரவித்தது 1983,1987.

                                                                    இவ்வளவு திறமைகளையும் பெருமைகளையும் கொண்ட அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களின் பெற்றோர்,இந்தியாவில்  உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட, காவல் துறையில் அதிகாரியாக  பணிபுறிந்த கரீம் பெக்,பீஜான் பீவி, இவருடைய உடன் பிறப்புக்கள் 13பேர்  இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு விபத்தில் கொழும்பில் மரணமான போது 

தம் பெற்றொருடன்  இலங்கை வந்த இவர்  இங்கே தங்கிவிடுகிறார்  தனது 18 வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து தொழில் புறிந்த இவரை  பிரபல இசை கலைஞர் 

கௌஸ் மாஸ்ட்டர்  அவர்கள் இனம் கண்டு உற்சாகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார்,

இவரது மனைவியின் பெயர் சகீனா பெக்  இவருக்கு 3 பிள்ளைகள் அவர்களும் பிரபலமான பாடகர்கள்.

                                                தனது 13 வது வயதில் பாடத் தொடங்கியவர் தனது72வது வயதில்       1991 நவம்பர் 4ம் திகதி  மரணமடைந்தார்.

அவருடைய வசனங்கள்;

         [  ;நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன் நான் புத்தர் பற்றிய பாடல்களை பாடுவதையே

             விரும்புகிறேன், எந்த மதமானாலும் நாமெல்லோரும் சகோதரர்கள், இந்த நாட்டு        மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாக   

கருதுகிறேன்;]

                 இந்த நாடு அவருக்கு என்ன செய்தது ஒரு தபால் தலை வெளியீட்டை தவிற