இடுகைகள்

அக்டோபர் 6, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னம்பிக்கை பதிவு.

*நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்.* *வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி.* *ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடை பிடிக்க வேண்டி உள்ளது.*  *இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது.*  *ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை.*  *காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இது வரை இல்லை என்பது தான் சத்தியம்.*  *நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக் கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பது தான்.*  *மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக் கூடியது அன்று.*  *நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலைய...