இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஃபலஸ்த்தீன்

  http:paripoorana.com இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.  பலஸ்தீன மண்ணை இஸ்‌ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்‌ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போரைத் தூண்டும் ஒரு நடவடிக்கை என்ற அடிப்படையில் உலகம் அதனைச் சரி காணவில்லை.  ஆனால், அதற்குப் பதிலடியாக, இன்று வரை சியோனிஸ இஸ்‌ரேல் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற  அழிச்சாட்டியத்தை, அதே உலக மக்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் துண்டித்து, தொடர்ச்சியாக பொது மக்கள் மீது இஸ்‌ரேல் படைகள் நடத்துகின்ற ஈவிரக்கமற்ற குண்டு மழை இஸ்‌ரேலை...

எமது உடன்பிறப்புகளே

  1.1 மில்லியன் மக்களை, வடக்கு காஸாவிலிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல். அதற்கு வெறும் 24மணி நேர அவகாசமே கொடுத்திருக்கிறார்கள். மூர்க்கமான வான்வழித் தாக்குதலை அது இன்னும் நிறுத்தவில்லை. காஸா எல்லாத் திசைகளிலும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. 'மனிதாபிமான வழிப்பாடு' ஒன்றைத் திறந்து விடுமாறு கோரியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. அகப்பட்ட வாகனங்களிலும் கார்களிலும் கழுதை வண்டிகளிலும் கால்நடையாக நடந்தும், பல்லாயிரக் கணக்கானோர் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என்று எல்லோருமே அடக்கம். எங்கே போகிறோம் என்று தெரியாமல், போக்கிடமின்றிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மேலும் பல்லாயிரக் கணக்கானோர், தத்தமது வீடுகளை விட்டு வெளியேறாமல், வருவது வரட்டும் என்றிருக்கிறார்கள். காஸா ஏற்கனவே சன அடர்த்தி மிக்க பிரதேசம். உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை. தெற்கு காஸாவில் போதியளவு உட்கட்டுமானங்கள் கூட இல்லை. அங்கே போய் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. இலட்சக் கணக்கானோரை அகதி முகாம்களில்...