22 டிசம்பர் 2020

நேர்மை

 நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு..! எல்லா மனிதர்களிடமிருந்தும்அதை எதிர்பார்க்க வேண்டாம்..!!*


*பணக்காரன் ஆக வேண்டுமா..??அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை..!தேவைகளைக்குறைத்துக் கொள்ளுங்கள்..!!*


*புதிதாக பலரை காணும் போது.. பலருக்கு பழைய முகங்கள் தெரியாமல் போய் விடுகிறது..!!*


*சில குற்றங்களை மன்னிப்பதாலும்.. பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன..!!*


*உங்கள் வெற்றிகளை எண்ணி பார்க்காதீர்கள்..உங்கள் தோல்விகளை மட்டும் எண்ணிப்பாருங்கள்..!வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..!!*


*உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு  செய்கிறது..!!*


*எளிதாக கிடைத்துவிடும் எந்த பொருட்களும்.. இனிதான நினைவுகளை தருவதில்லை..!!*


*நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு..!உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு..!!*


*சத்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில , சாகசங்களை செய்து தான் தீரவேண்டும்..*


*சிகரத்தை நீங்கள் தீண்ட வேண்டுமானால் , சீரும் துணிவை பெற்றிருக்கவேண்டும்.*


*சுழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த , சூதாட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும்.*


*செம்மல்கள் எத்தனை தோன்றினாலும் இவனது , சேர்க்கைகள் மட்டும் குலைந்தே போகிறது.

 

*சோர்வு ,சோகம் ,சோம்பல் ,இவைகளை தள்ளி வையுங்கள்





14 டிசம்பர் 2020

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!!
*இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!*
*தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!*
*வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!*
*மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!*
*உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!*
*மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!*
*பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!*
*அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.*
*எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்.. அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக போவதே..*
*அமைதியாக போவதை வைத்து, கோழை என்று நினைத்து விடாதீர்கள்..*
*வார்த்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு.. நிறைய மன உறுதியும், பக்குவமும் தேவை..!!*


வாழ்வை வாழ்வோம்

 

வாழ்வைப் புதுப்பிப்போம்.
*கவலையை போக்கும்* 
*இராஜதிரவமே புன்னகை.*
*புன்னகை..!*
*முகத்திற்கு மனதிற்கும்*
*அழகு ஊட்டுகிறது.*
*புன்னகை..!*
*புத்துணர்ச்சி ஊட்டும்* 
*மாமருந்து.*
*நகைச்சுவை உணர்வு* 
*நம்மை உயர்த்துவதோடு,*
*சோகத்தை தடுக்கிறது.*
*மனிதன் சிரிக்கத்* 
*தெரிந்த விலங்கு.*
*சிரிப்பு...!*
*மனிதன் என்கிற*
*அறிமுகத்தைத் தருகிறது.*
*நகைச்சுவை துன்பத்தின்*
*சுமையை எளிதாக்குகிறது.*
*பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.*
*சோகங்களிலிருந்து*
*மீட்டெடுக்கிறது.*
*இடுக்கண்* 
*வரும்போதும் நகுவோம்.*
*இல்லறம் சிறக்க* 
*சிரித்து மகிழ்வோம்.*
*நாம் சிரித்து* 
*வாழவேண்டும் தவறில்லை.*
*பிறரைத்தாக்கி, கிண்டலடித்து*
*மகிழக் கூடாது.*
*தமிழர் வழியுமல்ல.*
*நாகரிகமும் அல்ல.*
*”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”*
*என வள்ளுவம் கூறுவதை* 
*மனதில் ஆழப் பதிய*
*வைத்துக்கொள்ள வேண்டும்.*
*வீட்டில் அனைவரும்* 
*மகிழ்ச்சியாக கூடி*
*அமர்ந்து பேசிச்* 
*சிரித்து மகிழ்வது* 
*நல்ல குடும்பத்திற்கான* 
*நாகரிக அடையாளம்.*
*நாம் மகிழ்ச்சியில்* 
*நமது உடலில் 86 தசைகள்* *இயங்குகின்றன*
*மூளைக்குத் தகவல்*
*அனுப்பும் நரம்புகள்* 
*நன்கு இயங்குவதோடு,*
*பெப்டைன் என்ற*
*ஒரு வித கார்மோன்* 
*சுரந்து இரத்த ஓட்டத்தை* *எளிமையாக்குகிறது.*
*உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது.*
*உற்சாகம் ஊற்றெடுக்கிறது.*
*மனம் அமைதி அடைகிறது.*
*வாய்விட்டுச் சிரிக்கும் போது,*
*உடலின் உள் உறுப்புகள்*
*நன்கு இயங்குகின்றன.*
*சிரிப்பு தான் நம்*
*உள் உறுப்புகளுக்கான* 
*உடற்பயிற்சி* 
*நம் முன்னோர்கள் கூறியது*
*வாய்விட்டுச் சிரித்தால்* 
*நோய் விட்டுப் போகும்.*
*சிரிப்பு ஒரு மருத்துவ முறை* 
*நவீன அறிவியல் உலகம் பல* *முறைகளில் நிரூபித்துள்ளது.*
*வாழ்க்கை*
*இருட்டிலேயே கிடக்கிறது.*
*சிரிக்கும்போது மட்டுமே*
*வெளிச்சமடைகிறது’*
*புதுக்கவிதையின்* 
*உட்பொருள் ஆழமானது.*
*கோபப்படும்போது,* 
*உடலில் 32 தசைகள்* 
*மட்டுமே இயங்கும்.*
*தசைகளின் இயக்கத்தால்*
*இரத்த ஓட்டத்தில் தடையாய்கிறது.*
*இருக்கமான நிலையில்*
*உடல் தசைகள் இயங்கும்.*
*இதயத்திற்குச் செல்லும்*
*ரத்தமும் இதயத்திலிருந்து*
*வெளியேறும் ரத்தமும்*
*அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.*
*ஆகவேதான் அடிக்கடி* *கோபப்படுபவர்களுக்கு*
*இதயம் சார்ந்த நோய்கள்* 
*வர வாய்ப்புள்ளதது.*
*மகிழ்ச்சியாய் இருப்பதற்கும்*
*சில வரையறைகள் உள்ளன.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் மகிழ்ச்சி*
*அளிக்க வேண்டும்.* 
*பிறரைத் துன்பத்தில்* 
*ஆழ்த்திவிட்ட ஒருவன்* 
*மகிழ்ச்சி அடைவானேயானால்,* 
*அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக்* *கொடுமையானது.*
*பிறரை மகிழவைத்து மகிழ்வதே,* *மகிழ்ச்சியில் உயர்வானது.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய்* 
*இருக்க வேண்டுமோ,*
*நமக்கும் உண்மையான
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

06 டிசம்பர் 2020

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.. எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு.
*ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.*
*ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன்.அதனால் இங்குள்ள புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்" என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.*
*அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது.* *இரண்டாவது கவரை திறந்து பார்த்தார்.* *அதில், "முன்பு மேலாளர்களாய் இருந்தவர்களைக் குறை சொல்" என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், "பாருங்கள், நான் என்ன செய்வது?இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக்கொண்டிரு கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.*
*இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போது தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர்கள் ஓர் பெரிய பிரச்சனையை கிளப்பினார்கள்.இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது.உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார் அதில், "உனக்கு அடுத்து வரப்போகும் புது மேலாளருக்கு இதே போல் மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்" என்று எழுதப்பட்டிருந்தது.*
வாழ்க்கையில் எந்த சோதனை வந்தாலும் கலங்காதீர்கள். எல்லா சிக்கல்களுக்கும் கண்டிப்பாக தீர்வு இருக்கும்.


*பூட்டுகள் தனியாக தயாரிக்கப்படுவது இல்லை. பூட்டை தயாரிக்கும் போதே அந்த பூட்டை திறப்பதற்கான சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*#வெற்றி_நமதே.
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும் 
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்