14 டிசம்பர் 2020

வாழ்வை வாழ்வோம்

 

வாழ்வைப் புதுப்பிப்போம்.
*கவலையை போக்கும்* 
*இராஜதிரவமே புன்னகை.*
*புன்னகை..!*
*முகத்திற்கு மனதிற்கும்*
*அழகு ஊட்டுகிறது.*
*புன்னகை..!*
*புத்துணர்ச்சி ஊட்டும்* 
*மாமருந்து.*
*நகைச்சுவை உணர்வு* 
*நம்மை உயர்த்துவதோடு,*
*சோகத்தை தடுக்கிறது.*
*மனிதன் சிரிக்கத்* 
*தெரிந்த விலங்கு.*
*சிரிப்பு...!*
*மனிதன் என்கிற*
*அறிமுகத்தைத் தருகிறது.*
*நகைச்சுவை துன்பத்தின்*
*சுமையை எளிதாக்குகிறது.*
*பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.*
*சோகங்களிலிருந்து*
*மீட்டெடுக்கிறது.*
*இடுக்கண்* 
*வரும்போதும் நகுவோம்.*
*இல்லறம் சிறக்க* 
*சிரித்து மகிழ்வோம்.*
*நாம் சிரித்து* 
*வாழவேண்டும் தவறில்லை.*
*பிறரைத்தாக்கி, கிண்டலடித்து*
*மகிழக் கூடாது.*
*தமிழர் வழியுமல்ல.*
*நாகரிகமும் அல்ல.*
*”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”*
*என வள்ளுவம் கூறுவதை* 
*மனதில் ஆழப் பதிய*
*வைத்துக்கொள்ள வேண்டும்.*
*வீட்டில் அனைவரும்* 
*மகிழ்ச்சியாக கூடி*
*அமர்ந்து பேசிச்* 
*சிரித்து மகிழ்வது* 
*நல்ல குடும்பத்திற்கான* 
*நாகரிக அடையாளம்.*
*நாம் மகிழ்ச்சியில்* 
*நமது உடலில் 86 தசைகள்* *இயங்குகின்றன*
*மூளைக்குத் தகவல்*
*அனுப்பும் நரம்புகள்* 
*நன்கு இயங்குவதோடு,*
*பெப்டைன் என்ற*
*ஒரு வித கார்மோன்* 
*சுரந்து இரத்த ஓட்டத்தை* *எளிமையாக்குகிறது.*
*உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது.*
*உற்சாகம் ஊற்றெடுக்கிறது.*
*மனம் அமைதி அடைகிறது.*
*வாய்விட்டுச் சிரிக்கும் போது,*
*உடலின் உள் உறுப்புகள்*
*நன்கு இயங்குகின்றன.*
*சிரிப்பு தான் நம்*
*உள் உறுப்புகளுக்கான* 
*உடற்பயிற்சி* 
*நம் முன்னோர்கள் கூறியது*
*வாய்விட்டுச் சிரித்தால்* 
*நோய் விட்டுப் போகும்.*
*சிரிப்பு ஒரு மருத்துவ முறை* 
*நவீன அறிவியல் உலகம் பல* *முறைகளில் நிரூபித்துள்ளது.*
*வாழ்க்கை*
*இருட்டிலேயே கிடக்கிறது.*
*சிரிக்கும்போது மட்டுமே*
*வெளிச்சமடைகிறது’*
*புதுக்கவிதையின்* 
*உட்பொருள் ஆழமானது.*
*கோபப்படும்போது,* 
*உடலில் 32 தசைகள்* 
*மட்டுமே இயங்கும்.*
*தசைகளின் இயக்கத்தால்*
*இரத்த ஓட்டத்தில் தடையாய்கிறது.*
*இருக்கமான நிலையில்*
*உடல் தசைகள் இயங்கும்.*
*இதயத்திற்குச் செல்லும்*
*ரத்தமும் இதயத்திலிருந்து*
*வெளியேறும் ரத்தமும்*
*அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.*
*ஆகவேதான் அடிக்கடி* *கோபப்படுபவர்களுக்கு*
*இதயம் சார்ந்த நோய்கள்* 
*வர வாய்ப்புள்ளதது.*
*மகிழ்ச்சியாய் இருப்பதற்கும்*
*சில வரையறைகள் உள்ளன.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் மகிழ்ச்சி*
*அளிக்க வேண்டும்.* 
*பிறரைத் துன்பத்தில்* 
*ஆழ்த்திவிட்ட ஒருவன்* 
*மகிழ்ச்சி அடைவானேயானால்,* 
*அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக்* *கொடுமையானது.*
*பிறரை மகிழவைத்து மகிழ்வதே,* *மகிழ்ச்சியில் உயர்வானது.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய்* 
*இருக்க வேண்டுமோ,*
*நமக்கும் உண்மையான
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: