இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேரரும் முஸ்லிம்களும்

  ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனைக்கான எதிர்வினை, கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. அந்த ஊடக மாநாட்டையடுத்து இரு முஸ்லிம் அரசியல்வாதிகள்  குற்றப்  புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த ஒரு முக்கியமான வெற்றியாக நோக்கப்படுகிறது. மேலும், தேர்தல்கள்  அண்மித்து வரும் நிர்ணயகரமான ஒரு கால கட்டத்தில் இன வெறியையும், மத வெறியையும் தூண்டும் விதத்தில் பேச முற்படும் நபர்களுக்கும் இத்தீர்ப்பின் மூலம் ஒரு 'கடுமையான செய்தி' அனுப்பி வைக்கப்பட்டிர...