06 மார்ச் 2021

என் சின்ன மகனின் பிறந்த நாள்


 காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற  என் அழகிய மகனுக்கு பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற 

எல்லாம் வல்ல இறைவனை

போற்றி

 என் சின்னவனே கண்மணியே

உனக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம்  என்றும் உண்னுடன் கூடிவாழும் 

இணைபிரியா உடன் பிற்ப்புகள்

எல்லாம் கிடைத்து 

வல்லவன் அல்லாஹ் காட்டிய

வழியில் வாழ்ந்திட இரு கரம்

ஏந்தி பி ரா ர் த் தி க்கும்

அன்பு DADA

22 டிசம்பர் 2020

நேர்மை

 நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு..! எல்லா மனிதர்களிடமிருந்தும்அதை எதிர்பார்க்க வேண்டாம்..!!*


*பணக்காரன் ஆக வேண்டுமா..??அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை..!தேவைகளைக்குறைத்துக் கொள்ளுங்கள்..!!*


*புதிதாக பலரை காணும் போது.. பலருக்கு பழைய முகங்கள் தெரியாமல் போய் விடுகிறது..!!*


*சில குற்றங்களை மன்னிப்பதாலும்.. பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன..!!*


*உங்கள் வெற்றிகளை எண்ணி பார்க்காதீர்கள்..உங்கள் தோல்விகளை மட்டும் எண்ணிப்பாருங்கள்..!வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..!!*


*உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு  செய்கிறது..!!*


*எளிதாக கிடைத்துவிடும் எந்த பொருட்களும்.. இனிதான நினைவுகளை தருவதில்லை..!!*


*நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு..!உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு..!!*


*சத்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில , சாகசங்களை செய்து தான் தீரவேண்டும்..*


*சிகரத்தை நீங்கள் தீண்ட வேண்டுமானால் , சீரும் துணிவை பெற்றிருக்கவேண்டும்.*


*சுழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த , சூதாட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும்.*


*செம்மல்கள் எத்தனை தோன்றினாலும் இவனது , சேர்க்கைகள் மட்டும் குலைந்தே போகிறது.

 

*சோர்வு ,சோகம் ,சோம்பல் ,இவைகளை தள்ளி வையுங்கள்





14 டிசம்பர் 2020

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!!
*இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!*
*தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!*
*வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!*
*மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!*
*உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!*
*மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!*
*பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!*
*அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.*
*எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்.. அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக போவதே..*
*அமைதியாக போவதை வைத்து, கோழை என்று நினைத்து விடாதீர்கள்..*
*வார்த்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு.. நிறைய மன உறுதியும், பக்குவமும் தேவை..!!*


வாழ்வை வாழ்வோம்

 

வாழ்வைப் புதுப்பிப்போம்.
*கவலையை போக்கும்* 
*இராஜதிரவமே புன்னகை.*
*புன்னகை..!*
*முகத்திற்கு மனதிற்கும்*
*அழகு ஊட்டுகிறது.*
*புன்னகை..!*
*புத்துணர்ச்சி ஊட்டும்* 
*மாமருந்து.*
*நகைச்சுவை உணர்வு* 
*நம்மை உயர்த்துவதோடு,*
*சோகத்தை தடுக்கிறது.*
*மனிதன் சிரிக்கத்* 
*தெரிந்த விலங்கு.*
*சிரிப்பு...!*
*மனிதன் என்கிற*
*அறிமுகத்தைத் தருகிறது.*
*நகைச்சுவை துன்பத்தின்*
*சுமையை எளிதாக்குகிறது.*
*பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.*
*சோகங்களிலிருந்து*
*மீட்டெடுக்கிறது.*
*இடுக்கண்* 
*வரும்போதும் நகுவோம்.*
*இல்லறம் சிறக்க* 
*சிரித்து மகிழ்வோம்.*
*நாம் சிரித்து* 
*வாழவேண்டும் தவறில்லை.*
*பிறரைத்தாக்கி, கிண்டலடித்து*
*மகிழக் கூடாது.*
*தமிழர் வழியுமல்ல.*
*நாகரிகமும் அல்ல.*
*”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”*
*என வள்ளுவம் கூறுவதை* 
*மனதில் ஆழப் பதிய*
*வைத்துக்கொள்ள வேண்டும்.*
*வீட்டில் அனைவரும்* 
*மகிழ்ச்சியாக கூடி*
*அமர்ந்து பேசிச்* 
*சிரித்து மகிழ்வது* 
*நல்ல குடும்பத்திற்கான* 
*நாகரிக அடையாளம்.*
*நாம் மகிழ்ச்சியில்* 
*நமது உடலில் 86 தசைகள்* *இயங்குகின்றன*
*மூளைக்குத் தகவல்*
*அனுப்பும் நரம்புகள்* 
*நன்கு இயங்குவதோடு,*
*பெப்டைன் என்ற*
*ஒரு வித கார்மோன்* 
*சுரந்து இரத்த ஓட்டத்தை* *எளிமையாக்குகிறது.*
*உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது.*
*உற்சாகம் ஊற்றெடுக்கிறது.*
*மனம் அமைதி அடைகிறது.*
*வாய்விட்டுச் சிரிக்கும் போது,*
*உடலின் உள் உறுப்புகள்*
*நன்கு இயங்குகின்றன.*
*சிரிப்பு தான் நம்*
*உள் உறுப்புகளுக்கான* 
*உடற்பயிற்சி* 
*நம் முன்னோர்கள் கூறியது*
*வாய்விட்டுச் சிரித்தால்* 
*நோய் விட்டுப் போகும்.*
*சிரிப்பு ஒரு மருத்துவ முறை* 
*நவீன அறிவியல் உலகம் பல* *முறைகளில் நிரூபித்துள்ளது.*
*வாழ்க்கை*
*இருட்டிலேயே கிடக்கிறது.*
*சிரிக்கும்போது மட்டுமே*
*வெளிச்சமடைகிறது’*
*புதுக்கவிதையின்* 
*உட்பொருள் ஆழமானது.*
*கோபப்படும்போது,* 
*உடலில் 32 தசைகள்* 
*மட்டுமே இயங்கும்.*
*தசைகளின் இயக்கத்தால்*
*இரத்த ஓட்டத்தில் தடையாய்கிறது.*
*இருக்கமான நிலையில்*
*உடல் தசைகள் இயங்கும்.*
*இதயத்திற்குச் செல்லும்*
*ரத்தமும் இதயத்திலிருந்து*
*வெளியேறும் ரத்தமும்*
*அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.*
*ஆகவேதான் அடிக்கடி* *கோபப்படுபவர்களுக்கு*
*இதயம் சார்ந்த நோய்கள்* 
*வர வாய்ப்புள்ளதது.*
*மகிழ்ச்சியாய் இருப்பதற்கும்*
*சில வரையறைகள் உள்ளன.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் மகிழ்ச்சி*
*அளிக்க வேண்டும்.* 
*பிறரைத் துன்பத்தில்* 
*ஆழ்த்திவிட்ட ஒருவன்* 
*மகிழ்ச்சி அடைவானேயானால்,* 
*அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக்* *கொடுமையானது.*
*பிறரை மகிழவைத்து மகிழ்வதே,* *மகிழ்ச்சியில் உயர்வானது.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய்* 
*இருக்க வேண்டுமோ,*
*நமக்கும் உண்மையான
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

06 டிசம்பர் 2020

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.. எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு.
*ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.*
*ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன்.அதனால் இங்குள்ள புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்" என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.*
*அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது.* *இரண்டாவது கவரை திறந்து பார்த்தார்.* *அதில், "முன்பு மேலாளர்களாய் இருந்தவர்களைக் குறை சொல்" என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், "பாருங்கள், நான் என்ன செய்வது?இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக்கொண்டிரு கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.*
*இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போது தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர்கள் ஓர் பெரிய பிரச்சனையை கிளப்பினார்கள்.இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது.உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார் அதில், "உனக்கு அடுத்து வரப்போகும் புது மேலாளருக்கு இதே போல் மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்" என்று எழுதப்பட்டிருந்தது.*
வாழ்க்கையில் எந்த சோதனை வந்தாலும் கலங்காதீர்கள். எல்லா சிக்கல்களுக்கும் கண்டிப்பாக தீர்வு இருக்கும்.


*பூட்டுகள் தனியாக தயாரிக்கப்படுவது இல்லை. பூட்டை தயாரிக்கும் போதே அந்த பூட்டை திறப்பதற்கான சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*#வெற்றி_நமதே.
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும் 
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்

                     
 

27 நவம்பர் 2020

அமைதியான மனம் பெற

 


    

    

    

    

    

   

    

   

1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்..


பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.


2.மறக்கவும்... மன்னிக்கவும்...


இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.


3. பாராட்டுக்காக ஏங்காதீர்கள்....


உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.


4. பொறாமைப்படாதீர்கள்...


நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.


5. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்..


தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைப்பீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.


6. தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்....


இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன உறுதியையும் பெறலாம்.


7. செய்ய முடிவதையே செய்யுங்கள்....


இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.


8.தினமும் தியானியுங்கள்...


தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்...

26 நவம்பர் 2020

குரங்கும் மனித வாழ்வும்

 



குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.*


*காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.*


*அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.*


*அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.*


*இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.* 


*ஆனால்,*


*மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?*


*மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?*


*மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.*


*இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.* 


*இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.*


*தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.*


*தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.*


*'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.*


*இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.* 


*அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,* 


*“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,*


*“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும்,*


*“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.* 


*மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...*


*"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;*


*“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.*


*“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.*


*“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.*


*“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.*


*"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.*


*"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.*


*"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.* 


*“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.*


*“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.*


*"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.* 


*“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.*


*“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.*


*"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "*


*என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.*


*இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.*


*தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..*


*தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, வேதாத்திரி  மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.*


*நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*     


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

                       *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*


 *#வாழ்க_வளமுடன்.*

23 நவம்பர் 2020

நாம் தனியாக இல்லை

 *வானத்தைப்பாருங்கள் நாம் தனித்து இல்லை . இந்த பிரபஞ்சம் முழவதும் நம்மிடம் நட்பாக உள்ளது . கனவு காண்பவர்களுக்கும் , உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.*
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு
*அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்தி பயணித்தால் ....*
*அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம் மனிதனை கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது நிதர்சனம்..!!!!*
*உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்....*
*எடுத்த எடுப்பிலேயே என்னால் இது முடியுமா என்று எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்...*
*தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது....*
*போட்டியில் தோற்றாலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானாவன்.*
*முயன்றால் உங்களால் முடியும்...*
*அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல...*
*விடா முயற்சியினால் தான்...!!!!*
 
*#வாழ்க_வளமுடன்.*

20 நவம்பர் 2020

உண்மைகள்

 தவிர்க்க முடியாமல்* 

*சில இழப்புகள்.*


*வெளிப்படுத்த* 

*முடியாமல் சில*

*உண்மைகள்.*


*நம்ப முடியாமல்* 

*சில துன்பங்கள்.* 


*அனுபவிக்க* 

*முடியாமல் சில* 

*சந்தோஷங்கள்.*


*இவை அனைத்தும்* 

*நிறைந்ததுதான்* 

*வாழ்க்கை...*


*வாழ்க்கை* 

*எல்லோருக்கும் சீராக*

*சென்று விடுவதில்லை..*


*ஏற்ற இறக்கம்* 

*யாராலும் தவிர்க்க* 

*முடியாது..*


*தவறி விழும் நிலையிலும்* 

*உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..*


*ஏனெனில்,*


*உங்கள் வேதனையை* 

*கொண்டாட.. இங்கு* 

*ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!*


*உங்களை* 

*நீங்களே செதுக்கி* 

*கொண்டே இருங்கள்..*


*வெற்றி பெற்றால்*

*சிலை..!*

*தோல்வி அடைந்தால்* 

*சிற்பி..!!*


*கடனாக இருந்தாலும் சரி..*

*அன்பாக இருந்தாலும் சரி..*

*திருப்பி செலுத்தினால்* 

*தான் மதிப்பு..!!*


*குறைகளை தன்னிடம்* 

*தேடுபவன் தெளிவடைகிறான்..!*


*குறைகளை பிறரிடம்* 

*தேடுபவன் களங்கப்படுகிறான்..!!*


*ஒருவர் எந்த காரியம்* 

*செய்தாலும் அதில்* 

*வெற்றி பெற முடியாமல்* 

*போவதற்கு ஊக்கமின்மை* 

*ஒரு பெரிய காரணமாக* *கருதப்படுகின்றது.* 


*ஊக்கம் இல்லாமல்* 

*செய்யும் எந்த காரியமாக* 

*இருந்தாலும்,* 

*அது முழுமையும்*

*பெறுவதில்லை,* 


*வெற்றியும்* 

*பெறுவதில்லை.* 


*நீங்கள்* 

*சிறியதோ, பெரியதோ,*

*நிச்சயம் ஊக்கத்தோடு* 

*ஒரு காரியத்தை செய்ய* 

*முயலும் போது,*


*அதில் வெற்றியும்,* 

*மகிழ்ச்சியும் உங்களைத்*

*தேடி வரும் என்பதில்*

*சந்தேகம் இல்லை.*


17 நவம்பர் 2020

மனமும் தன்னுணர்வும்



*மனம் ஒரு பிளவுபட்ட* 

*கண்ணாடியைப் போன்றது ..!*


*உணர்வுகள் பிளவுபட்டு* 

*விடும்போது அவை* 

*மனமாக மாறி விடுகிறது ..!*


*நீங்கள் உள்ளே* 

*பிளவு பட்டிருப்பதால்*

*அவை வெளியே* 

*வேறுபட்டு தெரிகின்றன ..!*


*எதிர் நிலை இல்லாமல்* 

*மனம் ஒரு பொருளைப்* 

*புரிந்து கொள்வதில்லை ..!*


*வேறுபாட்டின்*

*வாயிலாகத்தான் எதையும்* 

*மனம் பார்க்க பழகியுள்ளது ..*


*இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்* 

*புரிந்து கொள்ளமுடியாது ..!*


*கவலையே இல்லையென்றால்* 

*நம்மால் சந்தோஷத்தை* 

*புரிந்து கொள்ள முடியாது ..!*


*மனதிற்கு எதிர்மறை* 

*தென்படும் போதுதான்* 

*எதையும் புரிந்து கொள்ளும் ..!*


*இருப்பு நிலைக்கு*

*எதிர்மறை* 

*எதுவும் கிடையாது ..!*


*மனம் எதிர்மறையின்* 

*வாயிலாகத்தான்* 

*இயங்கும் ..!*


*ஆனால் இருப்புநிலை* 

*ஒன்றையே சார்ந்தது ..!*


*மனம் இரட்டை நிலை* 

*கொண்டது ...

11 நவம்பர் 2020

வலிகள் தான்.வாழ்க்கை



*வாழ்க்கையில்*

*ஆயிரம் வலிகளும்,*

*வேதனைகளும்,*

*துன்பங்களும்*

*இருக்கத் தான் செய்யும்.*


*வாழ்க்கையை*

*ரசித்து வாழ வேண்டும்*  

*எல்லாம் கடந்தால் தான்*

*சிகரங்களை அடைய முடியும்.*


*வலிகளை*

*ஏற்றுக் கொள்ளாத* 

*வரையில்* 

*வாழ்க்கையில்*

*வளங்களைக்* 

*காண முடியாது.*


*பெரும்பாலான* 

*வெற்றியாளர்களின்* 

*சாதனைகளை* 

*உரம் போட்டு வளர்ப்பதே*

*அவர்களின்* 

*பெருந்தோல்விகளும்*, 

*பொறுக்க முடியாத*

*வலிகளும் தான்.*


*வலி வந்த போது*

*தான் நாம் இந்த* 

*பூமிக்கு வருகிறோம்.*


*வலியோடு தான்*

*நம் தாய் நம்மைப்*

*பிரசவிக்கிறாள்.*


*வலிகளால்*

*நிரப்பப்பட்டது தான்*

*இந்த வாழ்க்கை.*


*உடற்பயிற்சி செய்யும்*

*போது ஏற்படும்*

*வலிகளை பொறுத்து*

*கொண்டு மீண்டும் மீண்டும்*

*பயிற்சி செய்யும் போது தான்* 

*அழகான உடற்கட்டை*  

*பெற முடிகிறது.*


*இப்படித் தான்* 

*இந்த வாழ்க்கையிலும்* 

*வலிகளை ஏற்றுக் கொள்ளும்* 

*போது தான் வளமான* 

*வாழ்க்கை வாழ முடியும்.*


10 நவம்பர் 2020

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?*

 





''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது!


உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம்.


*''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''*


''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.


துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''


*''முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன?''*


''உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலி வருவதற்கான முக்கியக் காரணம். வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.''


*''எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?''*


''எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை 'எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது!''


*''முதுகு வலித் தொல்லையில் இருந்து விடுபட, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?''*


''அப்படி இல்லை. 'பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால், பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள் இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது. அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid)சேர்ப்பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்!''


*''எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள் செய்யலாம்?''*


''நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது!''



28 அக்டோபர் 2020

 சிலர் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவதில்லை....


சிலவேளைகளில் எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும் வலிகள் ஆறுவதில்லை


உறவுகள் நிலைக்க வேண்டுமென்றால் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது


அந்த உறவு தொடர வேண்டுமென்றால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க வேண்டி இருக்கிறது


கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்களுக்கு வார்த்தைகளால் கொலை செய்ய தெரிகிறது


மௌனத்தை உணர்ந்து கொள்ள தெரியாதவர்களுக்கு வீண்பழி சுமத்த முடிகிறது


புரிந்து கொண்டால் கோபத்திற்கான நியாயம் தெரியும்


புரியவில்லை என்றால் அன்பின் ஆழம் கூட தெரியாது


காயங்களை மற்றவர்களுக்கு காட்டிகொள்ளாமல் உள்ளுக்குள் தன்னைத்தானே வருத்திக்கொண்டு


புன்னகையோடு கடந்து செல்லும் மனிதர்களில் நானும் ஒருவன்