இடுகைகள்

இஸ்ரேல் பலஸ்தீன்

படம்
  இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை? இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் 1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடிவருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடிவருவது பாலஸ்தீனம். இஸ்ரேல்.  யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்துவருகின்றனர். மற்றொரு பிரதேசமான  பாலஸ்தீனம்  இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை, காஸா என ப...

என் சின்ன மகனின் பிறந்த நாள்

படம்
 காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற  என் அழகிய மகனுக்கு பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற  எல்லாம் வல்ல இறைவனை போற்றி  என் சின்னவனே கண்மணியே உனக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம்  என்றும் உண்னுடன் கூடிவாழும்  இணைபிரியா உடன் பிற்ப்புகள் எல்லாம் கிடைத்து  வல்லவன் அல்லாஹ் காட்டிய வழியில் வாழ்ந்திட இரு கரம் ஏந்தி பி ரா ர் த் தி க்கும் அன்பு DADA

நேர்மை

 நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு..! எல்லா மனிதர்களிடமிருந்தும்அதை எதிர்பார்க்க வேண்டாம்..!!* *பணக்காரன் ஆக வேண்டுமா..??அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை..!தேவைகளைக்குறைத்துக் கொள்ளுங்கள்..!!* *புதிதாக பலரை காணும் போது.. பலருக்கு பழைய முகங்கள் தெரியாமல் போய் விடுகிறது..!!* *சில குற்றங்களை மன்னிப்பதாலும்.. பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன..!!* *உங்கள் வெற்றிகளை எண்ணி பார்க்காதீர்கள்..உங்கள் தோல்விகளை மட்டும் எண்ணிப்பாருங்கள்..!வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..!!* *உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு  செய்கிறது..!!* *எளிதாக கிடைத்துவிடும் எந்த பொருட்களும்.. இனிதான நினைவுகளை தருவதில்லை..!!* *நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு..!உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு..!!* *சத்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில , சாகசங்களை செய்து தான் தீரவேண்டும்..* *சிகரத்தை நீங்கள் தீண்ட வேண்டுமானால் , சீரும் துணிவை பெற்றிருக்கவேண்டும்.* *சுழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த , சூதாட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும்.*...

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!! *இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!* *தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!* *வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!* *மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!* *உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!* *மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!* *பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!* *அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.* *எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்....

வாழ்வை வாழ்வோம்

  வாழ்வைப் புதுப்பிப்போம். *கவலையை போக்கும்*  *இராஜதிரவமே புன்னகை.* *புன்னகை..!* *முகத்திற்கு மனதிற்கும்* *அழகு ஊட்டுகிறது.* *புன்னகை..!* *புத்துணர்ச்சி ஊட்டும்*  *மாமருந்து.* *நகைச்சுவை உணர்வு*  *நம்மை உயர்த்துவதோடு,* *சோகத்தை தடுக்கிறது.* *மனிதன் சிரிக்கத்*  *தெரிந்த விலங்கு.* *சிரிப்பு...!* *மனிதன் என்கிற* *அறிமுகத்தைத் தருகிறது.* *நகைச்சுவை துன்பத்தின்* *சுமையை எளிதாக்குகிறது.* *பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.* *சோகங்களிலிருந்து* *மீட்டெடுக்கிறது.* *இடுக்கண்*  *வரும்போதும் நகுவோம்.* *இல்லறம் சிறக்க*  *சிரித்து மகிழ்வோம்.* *நாம் சிரித்து*  *வாழவேண்டும் தவறில்லை.* *பிறரைத்தாக்கி, கிண்டலடித்து* *மகிழக் கூடாது.* *தமிழர் வழியுமல்ல.* *நாகரிகமும் அல்ல.* *”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”* *என வள்ளுவம் கூறுவதை*  *மனதில் ஆழப் பதிய* *வைத்துக்கொள்ள வேண்டும்.* *வீட்டில் அனைவரும்*  *மகிழ்ச்சியாக கூடி* *அமர்ந்து பேசிச்*  *சிரித்து மகிழ்வது*  *நல்ல குடும்பத்திற்கான*  *நாகரிக அடையாளம்.* *நாம் மகிழ்ச்சியில்*  *நமது உடலில் ...

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.. எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு. *ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.* *ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன்.அதனால் இங்குள்ள புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்" என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.* *அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது.* *இரண்டாவது ...

அமைதியான மனம் பெற

                                        1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்.. பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2.மறக்கவும்... மன்னிக்கவும்... இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3. பாராட்டு...