ஃபாலஸ்தீன் 02
ஆனால் தனது அறிவிப்புக்கு மாற்றமாக ஒரு நாள் முன்னதாக பிரிட்டன் ராணுவம் வெளியேறியது இதை முற்கூட்டியே யூத ராணுவத்திடம் சொல்லிவிட்டது.
என்ன ஏது என்று பாலஸ்தீனர்கள் சுதாரிப்பதற்குள் யூத ராணுவம் நேரடி நடவடிக்கைகளில் இறங்கியது
பிரிட்டன் அமெரிக்க சதியும் யூத
நாடு உருவாதலும்.
1948 மே 14 அன்று இஸ்ரேல் என்ற யூத நாடு உருவாகி விட்டதாக ஜியோனிச சபையில் டேவிட் பென்குரியன் அறிவித்தார். அடுத்த வினாடியே அமெரிக்க அதிபர் ட்ரூமன் அந்நாட்டை அங்கீகரித்தார்.
1948 மே 16 அன்று 6 அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன.
அன்று ஒரே நாளில் 13000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 530 ஊர்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அன்று தொடங்கி ஜூலை முடிய 77 நாளில் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு பேரழிவு என வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
1948 மே 16 அன்று ஆறு அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. இதில் பாலஸ்தீனத்தின் 78 சதவீத இடங்களை இஸ்ரேல் தன் வசப்படுத்தியது.
1949 பிப்ரவரி 24 ல் எகிப்து இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது; காசா எகிப்து வசமானது. அப்போது எகிப்தை பாருக் மன்னர் ஆட்சி செய்தார். ஜோர்டான் ஒப்பந்தம் செய்தது மேற்கு கரை அதன் வசமானது; மன்னர் அப்துல்லா ஆட்சி செய்தார். சிரியாவும் லெபனானும் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்தன. ஜெருசலத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. சொந்த நாட்டிலேயே பாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளாகினர்.
அமெரிக்காவின் செல்ல பிள்ளையான
இஸ்ரேல்:
1951இல் அமெரிக்காவில் வாழும் யூதர்கள் ஐப்பெக் என்ற அமைப்பை தோற்றுவித்து அமெரிக்கா முழு அளவில் இஸ்ரேலுக்கு சாதகமான நாடாக என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக முழு வீச்சில் செயல்பட்டனர்.
1953- 61 காலகட்டங்களில் அமெரிக்க அதிபராக இருந்த ஐசன் ஹவர், மத்திய கிழக்கின் இயற்கை வளம், முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க இஸ்ரேல் வலிமைமிக்க நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை அறிவித்து ராணுவ பொருளாதார உதவிகளை தாராளமயமாக்கினார் . அதுதான் இன்றைக்கு வரையிலும் அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
த்து ஃபிரீ ஆஃபீஸர்ஸ் இயக்கத்தை அன்வர் சாதாத் நடத்தினார். எகிப்து மன்னர் பாரூக்கின் துரோகத்தால் இந்த இயக்கம் பெரும் அழிவை சந்தித்தது.
பாலஸ்தீன விவகாரத்தில் அரபு நாடுகளின் நயவஞ்சகத்தனத்தால் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிப்பது என முடிவு செய்து 1952 ல் பத்தாஹ் இயக்கத்தை யாசர் அரஃபாத் தோற்றுவித்தார். பின்னர் பல குழுக்கள் உருவாயின.
பல குழுக்களாக இருப்பதால் பயனில்லை என்ற முடிவில் அகமது அல் சுக்ரீ தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற பெயரில் அவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கமால் அப்துல் நாசர் 1967-ல் இஸ்ரேல்- பாலஸ்தீன் இரு தேச எல்லைகளை வரையறுத்தார். ஜியோனிஸ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே ஆண்டு நடைபெற்ற 6 நாள் யுத்தத்தில் காசா, ஜோர்டானின் மேற்கு கரை, சிரியாவின் கோலன் குன்று, எகிப்தின் சினாய் மட்டுமின்றி ஜெரூசலத்தையும் முற்றிலுமாக இஸ்ரேல்கை பற்றியது .இப்போதும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக வெளியேறினர்.
1969 பிப்ரவரி 3 ல் யாசர் அரஃபாத்
பி. எல். ஓ. தலைவரானார். அவரை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.ஐ.நா பார்வையாளர் அந்தஸ்து அளித்தது.
1973 அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. 1979இல் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டரின் முயற்சியில் இஸ்ரேல் எகிப்து ஒப்பந்தம் கேம்ப் டேவிட்டில் ஏற்பட்டது
பி எல்ஓ ,ஜியோனிஸ சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இஸ்ரேலை அங்கீகரிக்கும் நிலைக்கு வந்ததால்
1980 களில் அஷெய்கு அகமது யாசின், "ஹர்கத்துல் முகாவதுல் இஸ்லாமியா" என்ற 'ஹமாஸ்' இயக்கத்தை உருவாக்கினார். இது மக்களின் மகத்தான ஆதரவைபெற்று காஸாவில் ஆட்சி அமைத்தது.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தின் அடக்குமுறை, பாலஸ்தீன் நிலங்களில் யூத குடியேறிகளின் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததால் அதை எதிர்த்து 1989ல் பாலஸ்தீனர்களின் பேரெழுச்சி நடைபெற்றது.
1993 செப்டம்பர் 13ல் நடைபெற்ற ஓஸ்லோ ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலை பி எல் ஓ அங்கீகரித்தது. பி எல் ஓ வை பாலஸ்தீனத்தின் அதிகார சபையாக இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக இஸ்ரேல் அதிபர் இஸ்ஹாக் ராபினை ஒரு யூதனே கொலை செய்தான். 2004 நவம்பர் 11 அன்று யாசர் அரஃபாத் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
இன்று பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணையும், இழந்த உரிமையையும் மீட்பதற்காக ஹமாஸ் மட்டுமின்றி 14 விடுதலைப் போராட்ட இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன அவர்களில் ஏராளமானோர் அழிக்கப்பட்டுள்ளனர் அந்த சுதந்திரப் போராளி குழுக்களின் பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2023 அக்டோபர் 7ல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலை காரணம் காட்டி இரண்டு ஆண்டு காலமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட 75000 பேர் கொல்லப்பட்டு விட்டனர். 1.50 லட்சம் பேர் நிரந்தர ஊனமாக்கப்பட்டு விட்டனர். காஸா முழுவதும் அழி
கப்பட்டு விட்டது. "பட்டினி "என்கின்ற கொடூர ஆயுதம் இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டது.
இந்த இனப் பேரழிவை உலகம் வேடிக்கை பார்த்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் மீது இஸ்ரேலும் ஹமாஸும் எகிப்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அமெரிக்க உட்பட உலக
நாடுகளில் ஏற்பட்டுள்ள
மக்களின் அதீத போராட்டங்களும், அமெரிக்க அதிபரின்
நோபல் பரிசு கணவும்
இன்னும் பல அரசியல்
காரணங்களுக்காக இந்த
20 அம்ச தீர்வு கொண்டு வரப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் ஏமாற்றப்படாமல்
இருக்க வேண்டும் என்பதுவே மதம் கடந்த
உலக மக்களின் வேண்டுதல்.
இந்த இனப் பேரழிவை உலகம் வேடிக்கை பார்த்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் மீது இஸ்ரேலும் ஹமாஸும் எகிப்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அமெரிக்க உட்பட உலக
நாடுகளில் ஏற்பட்டுள்ள
மக்களின் அதீத போராட்டங்களும், அமெரிக்க அதிபரின்
நோபல் பரிசு கணவும்
இன்னும் பல அரசியல்
காரணங்களுக்காக இந்த
20 அம்ச தீர்வு கொண்டு வரப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் ஏமாற்றப்படாமல்
இருக்க வேண்டும் என்பதுவே மதம் கடந்த
உலக மக்களின் வேண்டுதல்.
கருத்துகள்