பலஸ்தீன் 01
சூ ழ் ச் சி களுக்கு பலியான பாலஸ்தீன் நிரந்தர அமைதி பெறுமா? ப்குதி 01.
20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அக்டோபர் 8, 2025 கையெழுத்தாகி உள்ளது.
முதல் கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ்- இஸ்ரேல் இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதை காண நான் இந்த வார இறுதியில் மத்திய கிழக்கு வருகிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் அடுத்த 72 மணி நேரத்தில் ஹமாஸ் வசமுள்ள 20 பணய கைதிகள் விடுவிக்கப்படுவர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 2000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதி வரைக்கும் திரும்பப்பெறும்.
நிரந்தர அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் காஸா மக்களும், இஸ்ரேலியர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்த நிகழ்வு ஈர்த்துள்ளது.
அக்டோபர் 7, 2023 பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தாக்குதல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
அன்றைய தினம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய ஹமாஸ், 1200 பேரைக் கொன்று, 251 பேரை பனைய கைதிகளாக பிடித்துச் சென்றதே பிரச்சனைகளுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த கூற்று உண்மையா?
இந்த இரண்டு ஆண்டு காலமாகத்தான் பாலஸ்தீனத்தில் பிரச்சனையா?
200 வருட வரலாறு
யூத தேசிய இனவாத சித்தாந்தம்:
கி பி 1834ல் போஸ்னியாவின் யூத மத போதகர் ராபி யஹுதா ஹை அல்கலை, "பாலஸ்தீனத்தில் யூத நாடு உருவாகி, யூதர்கள் அனைவரும் அங்கு குடியேறி, ஹீப்ரு மொழியையே தங்கள் மொழியாக பேசி, ஆட்சி அதிகாரம் செலுத்தி, தங்கள் மதம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை பாதுகாக்க வேண்டும்" என்ற யூத தேசிய இனவாத கருத்தாக்கத்தை வேரூன்றினார். இதனை லாத்வியாவின் ஆபிரகாம் ஐசக் கு, போலந்த் மத போதகர் ஸ்விஹர்ஷ் கலிச்செர் போன்றவர்கள் வளர்த்தனர்.
ஹங்கேரியில் பிறந்து வியன்னாவில் சட்டம் பயின்று, ஆஸ்திரியாவில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்த தியோடர் புன்யாமின் ஜீவ் ஹெர்ஸல் தமது 36 வது வயதில் கிபி 1896 ல் "உலக ஜியோனிஸ அமைப்பை "நிறுவி "யூத அரசு" என்ற சித்தாந்தத்தையும் வெளிப்படுத்தினார்.
1897 ஆகஸ்ட் 29, 30, 31 தேதிகளில் சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் 24 நாடுகளில் இருந்து யூதர்கள் பல நூறு பேரை வரவழைத்து மாநாடு நடத்தி தன் நோக்கங்களை வெளிப்படுத்தினார். தனது நோக்கம் நிறைவேறும் முன்பே 44 வது வயதில் மரணம் அடைந்தார்.
ஆக 200 ஆண்டுகள் பாலஸ்தீனத்தில் யூத தேசம் என்ற கனவு. அதற்காக 19, 20 இரு நூற்றாண்டுகளாக பாலஸ்தீனில் யூதர்கள் குடியேற்றம். அன்று தொடங்கி இன்று வரை பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
1901ல் துருக்கி சென்ற தியோடர் ஹெர்ஸல் இஸ்தான்புல்லை தலைநகராகக் கொண்டு நடைபெற்ற உதுமானிய கிலாஃபா ஆட்சியின் கலீபா இரண்டாம் அப்துல் ஹமீத் கானிடம், "யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியேற்ற அனுமதி யுங்கள்; அதற்கு ஈடாக உதுமானிய கிலாபா பேரரசின் கடன்களை அடைக்க உலகம் முழுவதும் உள்ள யூத செல்வந்தர்கள் உதவுவார்கள்" என ஜெர்மன் அதிபர் மூலம் பேரம் பேசினார்.
"முஸ்லிம்களின் ரத்தத்தால் பாதுகாக்கப்பட்ட பாலஸ்தீன் புனித பூமியின் ஒரு பிடி மண்ணைக் கூட தர மாட்டோம்; இஸ்லாமிய கிலாபா ஆட்சி இருக்கின்ற வரை அது நடக்காது" என ஹெர்சலை சந்திக்க மறுத்தார் கலீஃபா இரண்டாம் அப்துல் ஹமீத் கான்.
அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்ற வரலாற்றை சிறிதாவது தெரிந்து கொண்டால் தான் பாலஸ்தீனத்தின் முக்கியத்துவம் தெரியவரும்.
இறைத்தூதர்களின் புனித பூமி:
ஆப்ரஹாம் என்ற நபி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) சந்ததிகளே யூத, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் என்பது வரலாறு. ஆப்ரஹாம் (நபி இப்ராஹிம் அலை) முதல் மனைவி சாரா. இவருக்கு பிறந்தவர் ஈஸாக் என்ற நபி இஷ்ஹாக் (அலை). இவரது வழித்தோன்றல்கள் யூதர்கள். இவரது புதல்வர் ஜேக்கப் என்ற நபி யாகூப் (அலை). இவரைத்தான் இஸ்ரவேல், இஸ்ரேல் என அழைக்கின்றனர்.
ஆப்ரஹாம்( நபி இப்ராஹிம் அலை) இரண்டாவது மனைவி ஹாஜரா. இந்த தம்பதியருக்கு பிறந்தவர் நபி இஸ்மாயில் (அலை). இவரது வழித்தோன்றல்கள் அரபிகள்.
சாரா மற்றும் இஸ்ஹாக் (அலை) ஆகியோரை இன்றுள்ள பாலஸ்தீனத்திலும், ஹாஜரா மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரை அரேபியாவின் மக்காவிலும் குடியமர்த்தினார் ஆப்ரஹாம்.
ஆப்ரஹாம் என்ற நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் பூர்வீகம் மெஸபடோமியா என்ற இன்றைய ஈராக். அதாவது யூப்ரடீஸ், டைக்ரீஸ் என்ற இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள நாடு. பண்டைய நாகரிகத்தின் தொட்டில் இது.
இவர்களுக்குப் பின் வந்தவர்களில் முக்கியமான தீர்க்கதரிசி மோசஸ் என்ற நபி மூசா (அலை) எகிப்தில் இருந்து யூதர்களை பாலஸ்தீனத்திற்கு அழைத்துச் சென்றவர். இவருக்கு இறைவனால் அருளப்பட்ட வேதம் தவ்ராத். ஹீப்ரு பைபிள் என்றும் தோரா என்றும் இது அழைக்கப்படுகிறது.
டேவிட் என்ற நபி தாவூத் (அலை) அவர்களுக்கும் இறைவனால் ஸபூர் என்ற வேதம் வழங்கப்பட்டது.
நபி ஈஸா (அலை) என்ற இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற நபி தாவூத் (அலை) அவர்களும் ,கி.மு 970- 931 காலகட்டங்களில் சாலமன் என்ற நபி சுலைமான் (அலை) அவர்களும் ஆட்சிப் பொறுப்புக்களில் இருந்தனர். சாலமன் ஆலயம் இவரால் கட்டப்பட்டது .
ஆபிரகாம் என்ற நபி இப்ராஹிம் அலை யூதரோ, கிறிஸ்தவரோ அல்ல; அவர் உண்மையான இறையடியாராக இருந்தார் என அல்குர்ஆன் 3:67 கூறுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டவர்களை தீர்க்கதரிசிகளாக முஸ்லிம்கள் ஏற்றே ஆக வேண்டும்.
ஆனால் யூதர்களும், கிறிஸ்தவர்களும் நபி இஸ்மாயில் (அலை), நபி முஹம்மத் (ஸல்) ஆகியோர்களை இறைத்தூதர்களாக ஏற்பது இல்லை.
கிறிஸ்துவின் வருகை;
ரோமானியர்களுடன் யூதர்கள் மோதல்:
கிறிஸ்துவின் வருகை யூத மதத்திற்கு விடப்பட்ட சவாலாக கருதப்பட்டது.
யூத குலத்தில் பிறந்து, யூத மதத் தலைவர்களின் அழுத்தம் காரணமாக ரோமப் பேரரசின் பாலஸ்தீன ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய உத்தரவிட்டான் .
பின் நாட்களில் ரோமானியர்களை எதிர்த்து யூதர்கள் பெரும் புரட்சி செய்தனர். அதில் ரோமானியர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க புரட்சி சிமோன் பார் கொச்பா தலைமையில் நடைபெற்றதாகும்.
ஆத்திரம் அடைந்த ரோமானியர்கள் யூதர்களை எதிர்த்தனர். அதில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் முற்றிலுமாக துடைத் தெறியப்பட்டனர்.
பண்டைய நாகரிகத்தின் மக்களான ரோமானியர்கள் பல நூற்றாண்டுகளாக அதிகார மையங்களாக இருந்தனர். ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்திருந்து.
ஆரம்ப காலங்களில் பல தெய்வங்கள், ஜுபிடர் ,மினர்வா போன்றவைகளை வழிபட்டு வந்த ரோமானியர்கள், பின்னர் பேரரசர்களை தெய்வங்கள் ஆக்கி அவர்களை வழிபடும் வழக்கத்தை கொண்டனர்.
புகழ்மிக்க ரோம பேரரசன் கான்ஸ்டன்டைன். பைசான்டியம் நகரை ரோம் என்று அழைக்கப்படும் கான்ஸ்டான்டினோபிளாக மாற்றியவன். கிறிஸ்தவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த டியோகிளீசியன் என்ற மன்னருக்கு நேர் மாற்றமாக கிறிஸ்தவர்களுக்கு எல்லா சலுகைகளையும் அளித்து ஆட்சி செய்தான்.
கான்ஸ்டண்டின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின் யூதர்கள் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறத் தொடங்கினர். ஐரோப்பா கிறிஸ்தவ மயமானது.
195 ஆண்டுகளில் 9 சிலுவை யுத்தங்கள்:
கி.பி 571 ல் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கி.பி 612 நபித்துவத்திற்கு பின் இஸ்லாமிய அழைப்பு பணியை வெளிப்படையாகச் செய்தார்கள். கி.பி 620 நபிகளின் விண்ணுலக பயணம் பாலஸ்தீனத்தின் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்தே தொடங்கி அங்கேயே திரும்பினார்கள். அவர்கள் விண்ணுலக பயணத்தை இங்கிருந்து தொடங்கிய இடமும் புராக் வாகனம் நிறுத்தப்பட்ட இடமும் இப்போதும் உள்ளது. இந்த சம்பவத்தின் போதே முஸ்லிம்களின் ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது. தொழுகைக்கு முன்னோக்கும் முதல் திசையும் மஸ்ஜிதுல் அக்ஸாவாகவே இருந்தது .
மதினமா நகரை தலைநகராகக் கொண்டு நடைபெற்ற இஸ்லாமிய ஆட்சி, கிபி632ல் நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் மறைவுக்குபின், 27 மாதங்கள் ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சி செய்தார். அவர்களைத் தொடர்ந்து 10 வருடங்கள் 6 மாதங்கள் நடைபெற்ற ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் போது கிபி 637 ல் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது. கிபி 1099 வரை ஜெருசலம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்தது.
ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்டேஆக வேண்டும்; இஸ்லாமிய கிலாபா ஆட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற சிந்தனை கிறிஸ்தவர்களுக்கு மேலோங்கி இருந்தது. அப்போது பாக்தாதை தலைநகராகக் கொண்டு அப்பாஸிய கிலாபா ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. முஸ்தழ்கர் பின் முக்ததி கலிபாவாக இருந்தார்.
ஆசியா, ஆப்பிரிக்காவை தொடர்ந்து ஐரோப்பாவின் கதவுகளையும் இஸ்லாம் தட்டி விடுமோ என நினைத்த ஐரோப்பிய கிறிஸ்தவ உலகம், கிபி 1095 நவம்பர் 18 அன்று பிரான்சின் கிளோமொன்டிலும்,
1096 மார்ச்சில் முவர்ஸிலும் மாநாடுகளை நடத்தி, பலநூறு மதகுருமார்களையும், பல ஆயிரம் கிறிஸ்தவர்களையும் திரட்டி போப்பரசர் இரண்டாம் ஏர்பன் முஸ்லிம்களுக்கு எதிராக தெய்வீக வாக்கு எனக் கூறி "புனித போர்" பிரகடனம் செய்தார்.
கிபி 1097ல் பாதிரியார் பீட்டர் தலைமையில் தொடங்கிய முதலாவது சிலுவை யுத்தம், யுத்த தர்மம் எதுவும் பின்பற்றப்படாமல் இனப்படுகொலையாகவே நடந்தது.
மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெருசலத்தில் மட்டும் 70 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இடத்தை அன்று நேரில் பார்த்த வரலாற்று ஆசிரியர் வேல்ஸ் ,"கொலை செய்யப்பட்டவர்கள் ரத்தம் என் முழங்கால் அளவு இருந்தது என்றும்; இந்த கொலைக்களம் சிலுவை வீரர்களை கூட அச்சத்தை ஏற்படுத்தி நிலைகுலையை செய்து விட்டது என வில்லியம் சூரியும் பதிவு செய்துள்ளனர்.
முதலாம் சிலுவையுத்தம்15 ஆண்டுகள் நடைபெற்றது. ஜெருசலேமும் பைத்துல் முகத்தஸும் கிறிஸ்தவர்கள் வசமானது.
பாத்திமியா கலிபா மரணமடைந்ததும் எகிப்து அப்பாஸிய கிலாபாவின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் வலிமைமிக்க ஆட்சியாளராக சலாஹுதீன் யூசுப் அய்யூபி கிபி 1169 மார்ச் 23ல் பொறுப்பேற்றார்.
1184 ஜூலை 4 திப்பேரியா தொடங்கி பெய்ரூத், அஸ்கலான் எனத் தொடர்ந்து ஜெருசலத்தை முற்றுகையிட்டு 1187 செப்டம்பர் 20 பைத்துல் முகத்தஸில் நுழைந்தார். சிலுவைப்படைகள் சரணடைந்தன. 90 வருடங்களுக்கு பின் மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு ஒலித்தது.
195 ஆண்டுகளில் 9 சிலுவை யுத்தங்கள் நடைபெற்றன. ஒன்பதாவது சிலுவை யுத்தத்திற்கு தலைமை தாங்கிய பிரான்ஸ் மன்னன் ஒன்பதாம் லூயி, "முஸ்லிம்களை போரில் வெற்றி கொள்ள முடியாது; எனக்கூறி, "முஸ்லிம்களை வெற்றிகொள்ள வழி இதுதான் என ஒன்பது அம்ச பிரகடனத்தை வெளியிட்டான். அதுதான் இன்று முஸ்லிம்களில் நடந்து கொண்டிருக்கிறது.
உதுமானிய கிலாபா ஆட்சியின் வீழ்ச்சி;
இஸ்லாமிய கிலாபா ஆட்சி வீழ்த்தப்பட்டால்தான் ஜெருசலத்தை ஆள முடியும் என்பது மேற்குலக ஆட்சியாளர்களின் எண்ணம். இதற்காக முஸ்லிம் இளைஞர்கள் இடையே இளந் துருக்கியர் இயக்கம், இஸ்லாமிய மண்ணில் மேற்கத்திய கலாச்சாரம், தேசியவாதம் எனப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன இதற்காக பெய்ரூத் மையம் முதல் இஸ்தான்புல் மையம் வரை திட்டமிட்ட அமைப்புகள் செயல்பட்டன. எண்ணற்ற சதி திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன.
கிபி 1798ல் பிரான்ஸ், எகிப்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தது. ஷாம் தேசம் முழுவதையும் ஆக்கிரமிக்க அது மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டு இழந்த பகுதிகள் மீட்கப்பட்டன.
பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ரஷ்யா கிலாபா அரசை வீழ்த்த பெரு முயற்சி மேற்கொண்டன.கிபி 1875 ல் அரபு தேசியவாதம் தூண்டி விடப்பட்டு, உதுமானிய கிலாபா அரசு அரபிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அரசு;அது துருக்கிய அரசு என்ற பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது.
சர். ஹென்றி கேம்பல் பானர்மேன் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது, ஐரோப்பிய கூட்டமைப்பின் ஏழு நாடுகளுக்கு 1907 ல் தாக்கல் செய்த அறிக்கையின் குறிப்பிட்ட நான்கு அம்சங்களில் ஒன்று, "பாலஸ்தீனத்தில் யூத தேசத்தை உருவாக்கி அதன் மூலம் மத்திய கிழக்கில் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி நாம் ஆள வேண்டும்" என்பதாகும்.
இந்நிலையில் தான் முதலாவது உலக மகா யுத்தம் 1914 ஜூலை28 அன்று தொடங்கியது. ஜெர்மன், ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா உள்ளிட்ட நாடுகள் ஒரு அணியாகவும், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா இத்தாலி, ஜப்பான், சீனா போன்றவை இன்னொரு அணியாகவும் போரிட்டன. இதில் உதுமானிய கிலாபா அரசு ஜெர்மன் பக்கம் இழுத்து விடப்பட்டது. அமெரிக்கா பிரிட்டன் பக்கம் சேர்ந்தது.
4ஆண்டுகள், 3 மாதங்கள், 2 வாரங்கள் நடைபெற்ற முதல் உலக மகா யுத்தம், 1918 நவம்பர் 11 அன்று ஜெர்மனி சரண் அடைந்ததும் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தில் ஜெர்மன் அணி தோல்வி அடைந்ததும் அந்த அணியின் நாடுகளை கூறு போட்டு பங்குபிரிக்க பிரிட்டன், பிரான்ஸ் தீவிரம் காட்டின.
உதுமானிய கிலாபா பேரரசின் ஆளுகையில் இருந்த ஷாம் தேசத்தின் பாலஸ்தீன் மற்றும் ஜோர்டானை பிரிட்டனும், சிரியா மற்றும் லெபனானை பிரான்ஸும் கைப்பற்றின. கிலாபா ஆட்சிக்கு எதிராக தங்களை ஆதரித்து செயல்பட்ட தீவிரவிசுவாசிகளுக்கு கிலாபா பேரரசின் பகுதிகளின் ஆட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
(உதுமானிய கிலாபா பேரரசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் இயக்கமே உருவாக்கப்பட்டது.) ஆனால் இஸ்லாமிய கிலாபா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் துருக்கியை மதச்சார்பற்ற நாடாக மாற்றவும் மாபெரும் சதியே அரங்கேற்றப்பட்டது.
அதற்கு முழு கருவியாக பயன்படுத்தப்பட்டவன்தான் முஸ்தபா கமால் . இவனது தாய் துருக்கிய இஸ்லாமிய பெண்ணாக இருந்தாலும் தந்தை வழியில் அல்பேனிய யூத இனத்தவன்.
கிபி 1924 மார்ச் 3 அன்று உதுமானிய கிலாபா ஆட்சி வீழ்த்தப்பட்டது. மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாக கலீபா அப்துல் மஜீத் துருக்கியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் மக்களின் அன்றாட வாழ்வியலில் இருந்து இஸ்லாத்தை பிரித்து விட வேண்டும் என்றும் முஸ்தபா கமால் அறிவிக்க செய்தான்.
பாலஸ்தீனில் யூத நாடு பிரிட்டனின் சூழ்ச்சி
முதலாம் உலகமகா யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது பிரிட்டன் ஆட்சியாளர்கள் அரேபிய முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாக்குறுதிகளை அளித்தனர்.
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, பிரிட்டனின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் 1917 நவம்பர் 2 வெளியிட்ட பிரகடனம்.
அதில், "பாலஸ்தீனத்தில் யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு தனி நாடு அமைத்துக் கொள்ள பிரிட்டன் முழு ஆதரவு தரும்; அதேசமயம் அங்கு வாழும் யூதர் அல்லாத இனங்களின் மத, சிவில் உரிமைகள் காக்கப்படும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பிரகடனம் தான் பாலஸ்தீனத்தின் அத்தனை அநியாயங்களுக்கும் கருவாக அமைந்தது.
1917 டிசம்பர் 11 அன்று பிரிட்டன் படை ஜாபாகேட் வழியாக ஜெருசலத்தில் நுழைந்தது. அதற்கு தலைமை தாங்கி சென்ற பிரிட்டன் படை தளபதி எட்மன்ட் ஆலன்பி இன்று தான் சிலுவையுத்தம் முடிவுக்கு வருகிறது என்றான்.
இந்த ஜாபாகேட் மிக முக்கியமானது. இதன் வழியாகச் சென்று தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து காட்சியளித்ததாக கிறிஸ்தவர்கள் நம்பும் இடங்கள் உள்ளன. இதில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது அந்த தேவாலயத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ரோம் அரசன் கான்ஸ்டன்ட்டைன் குடும்பத்தார் கட்டினர் அந்த தேவாலயத்தின் பல பகுதிகளும் தனித்தனியே
6 கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் பொறுப்பில் இருந்தாலும் அதன் சாவி இன்றைக்கு வரையிலும் இரண்டு முஸ்லிம் குடும்பங்களிடமே உள்ளன.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் உலக நாடுகள் சேர்ந்து அமைத்த "தி லீக் ஆஃப் நேஷன்ஸ்" அமைப்பிடம் பாலஸ்தீன் விவகாரம் 1922 ஜூலை 24 அன்று கொண்டு செல்லப்பட்டது. பாலஸ்தீனத்தில் யூத நாடடு அமைக்கப்படுவதற்கு அது ஆதரவு தெரிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபை செய்த மாபெரும் துரோகம்:
இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இருந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ,முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் பொருளாதார வீழ்ச்சிக்கும் யூதர்களே காரணம் என அறிந்து யூத இன அழிப்பை அரங்கேற்றினான்.
அந்தப் போரில் ஜெர்மன் அணியை எதிர்த்து யூதர்களை முழுமையாக போரில் ஈடுபடச் செய்ய யுத்தத்துக்கு பின் யூத நாடு வாக்குறுதியை பிரிட்டன் மீண்டும் தெரிவித்தது.
இரண்டாம் உலகப்போர் 1945 ஆகஸ்ட் 9 ஜப்பான் சரணடைந்ததோடு முடிவுக்கு வந்தது..
இந்த யுத்தத்திற்கு பின் உலக நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையை அமைத்தன .
'பாலஸ்தீனில் யூத நாடு' விவகாரம் 1947 நவம்பர் 29 அன்று அங்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பாலஸ்தீனில் 70 சதவீதம் வாழும் முஸ்லிம்களுக்கு 43 சதவீத இடங்களும், 30 சதவீதம் வாழும் யூதர்களுக்கு 56 சதவீத இடங்களும் அளிக்கப்படுவதாகவும், ஜெருசலம் ஐநா சபையின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும் அறிவித்தது. ஆனால் இதை அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனிடையே 1938 ல் மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது 10 ஆண்டுகளில் இது அபரிமிதமான வளர்ச்சியை கண்டது.
இந்த யுத்தத்திற்கு பின் பிரிட்டனில் சர்ச்சிலின் கட்சி தோல்வி அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
1948 மே 15 அன்று பாலஸ்தீனத்தில் உள்ள தங்களின் ராணுவம் முழுமையாக வெளியேறும் என பிரிட்டன் அறிவித்தது.
இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட அனுபவம், ராணுவ கட்டமைப்பு என சகல ஆயத்தங்களோடும் யூத ராணுவம் பாலஸ்தீனில் தயாராக இருந்தது.

மத்திய கிழக்கில் எண்ணெய்
வளம்,
இதுதான் அமெரிக்க பிரிட்டன் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கண்களை உறுத்தின. இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்கா ஹீரோவாக மாறிவிட்டது.

கருத்துகள்