இடுகைகள்

வாழ்க்கை

  மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம்.  விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம். அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும். அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது.  கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான். சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான். நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.  அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும். நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!

திறமை

கால நேரம் என்பது

                                "காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழ மொழிகள் நாம் அறிந்ததே.  வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள்.  அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள். காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனை யாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது.  கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.  "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்  என்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப் படுகிறது.  உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொ...

தன்னம்பிக்கை பதிவு.

*நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்.* *வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி.* *ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடை பிடிக்க வேண்டி உள்ளது.*  *இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது.*  *ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை.*  *காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இது வரை இல்லை என்பது தான் சத்தியம்.*  *நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக் கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பது தான்.*  *மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக் கூடியது அன்று.*  *நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலைய...

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂ *சிக்கல் இல்லாத*  *மனிதன்*  *உலகில் இல்லை.* *சிக்கலை கண்டு*  *மிரளாமல்,* *சிக்கலின் காரணத்* *தன்மை, ஆராய்.* *திறக்க முடியாத*  *பூட்டே கிடையாது.*  *சரியான சாவியைக்*  *கண்டுபிடிக்காதவர்கள்* *தான் அதிகம் உண்டு.* *தீர்க்க முடியாத துன்பம்* *எதுவும் கிடையாது.*  *தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.* *இன்று கவலையாகத்* *தெரியாவது,*  *நாளை மகிழ்வாய்* *மாறும், மலரும்.* *எந்தக் கவலையையும்*  *ஆராய்ந்து சரியான* *தீர்வைக் காண்பதே* *வாழ்வின் உன்னதம்.* 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️        *.*
 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன் *"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று, 🍁அறிஞர் சொன்னார்,* *உன் அறையை செக் பண்ணு, என்று 🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது மேற் கூரை சொன்னது* உன் எண்ணங்களை உயர்வாக வை என்று 🍃காத்தாடி சொன்னது,* என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று *🍃கடிகாரம் சொன்னது,  நேரத்தை மதிக்கனும் என்று *🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள்  என்று. 🍃மணிபர்ஸ் சொன்னது ,* வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று 🍃கண்ணாடி சொன்னது,* உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று . 🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று  என்று *🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று தரை சொன்னது,* எப்பவும் கீழே பணிவாக இரு என்று 🍃படிக்கட்டு சொன்னது,* வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை  என்று *இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*

விவேகம்

*அறிவான வேகம்* *விவேகம்.* *எண்ணித் துணிவதும்..!* *சிந்தித்துத் தெளிவதும்..!* *முனைப்பாய் செய்வதும்..!* *விவேகம்.* *வெற்றியோ தோல்வியோ*  *இறுதி வரை போராடிச்* *செயல் ஆற்றுவதும்* *விவேகம்* *துணிந்த பிறகு மீண்டும்,* *பின் வாங்குவதையோ,* *இழுக்கு என்று மனதுக்குள்*  *நினைப்பதும்.* *விவேகம்* *விவேகம் உள்ளவர்கள்* *விவேகி.* *செயலிலே வேகம்,*  *சிந்தையிலே விவேகம்.* *சீரிய கட்டுப்பாட்டிற்குள்* *செயல்படுவார்கள்.* *விவேகி* *விவேகியிடம்* *பகுத்தறிவு, புத்திக் கூர்மை,* *மதிநுட்பம், ஞானம்* *அறிவு, சாமர்த்தியம்,* *ஒருசேர இருக்கும்* *வாழ்வில் விவேகம்*  *தீமையைக் குறைத்து* *நன்மையை நாடுவது.* *கடலின் ஆழத்தில்*  *முத்தைக் கண்டு பிடிப்பது* *பிரச்சனைகளின்* *ஆழத்தில் முடிவின்* *தீர்வைக் கண்டு பிடிப்பது* *விவேகம்.* *விவேகம்* *ஏட்டுச் சுரைக்காய் அல்ல.* *வாழ்வில் பல* *நெருக்கடிகளைச் சந்தித்து* *எதிர்கொண்டு கடந்து* *வந்தவர்களே* *விவேகிகள்.* *ஆம்.,* *இருள் தடுமாறச்* *செய்கிறது.*  *விவேக வெளிச்சம்* *உற்சாகம் தருகிறது.* *அபரிதமான*  *நம்பிக்கையைத்* *தருவதும்* *விடியலைக்* *காண்பதும்* *வி...