ஃபாலஸ்தீன் 02
ஆனால் தனது அறிவிப்புக்கு மாற்றமாக ஒரு நாள் முன்னதாக பிரிட்டன் ராணுவம் வெளியேறியது இதை முற்கூட்டியே யூத ராணுவத்திடம் சொல்லிவிட்டது. என்ன ஏது என்று பாலஸ்தீனர்கள் சுதாரிப்பதற்குள் யூத ராணுவம் நேரடி நடவடிக்கைகளில் இறங்கியது பிரிட்டன் அமெரிக்க சதியும் யூத நாடு உருவாதலும். 1948 மே 14 அன்று இஸ்ரேல் என்ற யூத நாடு உருவாகி விட்டதாக ஜியோனிச சபையில் டேவிட் பென்குரியன் அறிவித்தார். அடுத்த வினாடியே அமெரிக்க அதிபர் ட்ரூமன் அந்நாட்டை அங்கீகரித்தார். 1948 மே 16 அன்று 6 அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. அன்று ஒரே நாளில் 13000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 530 ஊர்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டன. அன்று தொடங்கி ஜூலை முடிய 77 நாளில் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு பேரழிவு என வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. 1948 மே 16 அன்று ஆறு அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. இதில் பாலஸ்தீனத்தின் 78 சதவீத இடங்களை இஸ்ரேல் தன் வசப்படுத்தியது. 1949 பிப்ரவரி 24 ல் எகிப்து இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது; காசா எகிப்து வசமானது. அப்போது எகிப்தை பாருக் மன்னர் ஆட்சி செய்தார். ஜோர்டான் ஒப்பந்தம் செய்...