கவிக்கோ வரிகள்
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான் வெளுப்பது உனது விடியலில்லை முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு முடிதல் என்பது எதற்குமில்லை மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும் மாலை சூட்டலும் மணமில்லை இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல் இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல. கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ கொண்ட அழுக்கோ போகவில்லை அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ அளித்த தெதுவும் உனதல்ல உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும் உடலுக் கணிவது உடையல்ல விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய் தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத் தின்னும் பசிகளுக் கிரையாவாய் வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும் வெற்றியிலே தான் தோற்கின்றார் ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன் அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய் கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக் கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய் ‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும் நாடக வசனம் பேசுகிறாய் ‘ஏன்’ ? என்பாய் இது கேள்வி...