இடுகைகள்

உண்மைகள்

 தவிர்க்க முடியாமல்*  *சில இழப்புகள்.* *வெளிப்படுத்த*  *முடியாமல் சில* *உண்மைகள்.* *நம்ப முடியாமல்*  *சில துன்பங்கள்.*  *அனுபவிக்க*  *முடியாமல் சில*  *சந்தோஷங்கள்.* *இவை அனைத்தும்*  *நிறைந்ததுதான்*  *வாழ்க்கை...* *வாழ்க்கை*  *எல்லோருக்கும் சீராக* *சென்று விடுவதில்லை..* *ஏற்ற இறக்கம்*  *யாராலும் தவிர்க்க*  *முடியாது..* *தவறி விழும் நிலையிலும்*  *உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..* *ஏனெனில்,* *உங்கள் வேதனையை*  *கொண்டாட.. இங்கு*  *ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!* *உங்களை*  *நீங்களே செதுக்கி*  *கொண்டே இருங்கள்..* *வெற்றி பெற்றால்* *சிலை..!* *தோல்வி அடைந்தால்*  *சிற்பி..!!* *கடனாக இருந்தாலும் சரி..* *அன்பாக இருந்தாலும் சரி..* *திருப்பி செலுத்தினால்*  *தான் மதிப்பு..!!* *குறைகளை தன்னிடம்*  *தேடுபவன் தெளிவடைகிறான்..!* *குறைகளை பிறரிடம்*  *தேடுபவன் களங்கப்படுகிறான்..!!* *ஒருவர் எந்த காரியம்*  *செய்தாலும் அதில்*  *வெற்றி பெற முடியாமல்*  *போவதற்கு ஊக்கமின்மை*  *ஒரு பெரிய ...

மனமும் தன்னுணர்வும்

*மனம் ஒரு பிளவுபட்ட*  *கண்ணாடியைப் போன்றது ..!* *உணர்வுகள் பிளவுபட்டு*  *விடும்போது அவை*  *மனமாக மாறி விடுகிறது ..!* *நீங்கள் உள்ளே*  *பிளவு பட்டிருப்பதால்* *அவை வெளியே*  *வேறுபட்டு தெரிகின்றன ..!* *எதிர் நிலை இல்லாமல்*  *மனம் ஒரு பொருளைப்*  *புரிந்து கொள்வதில்லை ..!* *வேறுபாட்டின்* *வாயிலாகத்தான் எதையும்*  *மனம் பார்க்க பழகியுள்ளது ..* *இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்*  *புரிந்து கொள்ளமுடியாது ..!* *கவலையே இல்லையென்றால்*  *நம்மால் சந்தோஷத்தை*  *புரிந்து கொள்ள முடியாது ..!* *மனதிற்கு எதிர்மறை*  *தென்படும் போதுதான்*  *எதையும் புரிந்து கொள்ளும் ..!* *இருப்பு நிலைக்கு* *எதிர்மறை*  *எதுவும் கிடையாது ..!* *மனம் எதிர்மறையின்*  *வாயிலாகத்தான்*  *இயங்கும் ..!* *ஆனால் இருப்புநிலை*  *ஒன்றையே சார்ந்தது ..!* *மனம் இரட்டை நிலை*  *கொண்டது ...

வலிகள் தான்.வாழ்க்கை

*வாழ்க்கையில்* *ஆயிரம் வலிகளும்,* *வேதனைகளும்,* *துன்பங்களும்* *இருக்கத் தான் செய்யும்.* *வாழ்க்கையை* *ரசித்து வாழ வேண்டும்*   *எல்லாம் கடந்தால் தான்* *சிகரங்களை அடைய முடியும்.* *வலிகளை* *ஏற்றுக் கொள்ளாத*  *வரையில்*  *வாழ்க்கையில்* *வளங்களைக்*  *காண முடியாது.* *பெரும்பாலான*  *வெற்றியாளர்களின்*  *சாதனைகளை*  *உரம் போட்டு வளர்ப்பதே* *அவர்களின்*  *பெருந்தோல்விகளும்*,  *பொறுக்க முடியாத* *வலிகளும் தான்.* *வலி வந்த போது* *தான் நாம் இந்த*  *பூமிக்கு வருகிறோம்.* *வலியோடு தான்* *நம் தாய் நம்மைப்* *பிரசவிக்கிறாள்.* *வலிகளால்* *நிரப்பப்பட்டது தான்* *இந்த வாழ்க்கை.* *உடற்பயிற்சி செய்யும்* *போது ஏற்படும்* *வலிகளை பொறுத்து* *கொண்டு மீண்டும் மீண்டும்* *பயிற்சி செய்யும் போது தான்*  *அழகான உடற்கட்டை*   *பெற முடிகிறது.* *இப்படித் தான்*  *இந்த வாழ்க்கையிலும்*  *வலிகளை ஏற்றுக் கொள்ளும்*  *போது தான் வளமான*  *வாழ்க்கை வாழ முடியும்.*

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?*

  ''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது! உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம். *''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''* ''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது. துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலு...

 சிலர் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவதில்லை.... சிலவேளைகளில் எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும் வலிகள் ஆறுவதில்லை உறவுகள் நிலைக்க வேண்டுமென்றால் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது அந்த உறவு தொடர வேண்டுமென்றால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க வேண்டி இருக்கிறது கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்களுக்கு வார்த்தைகளால் கொலை செய்ய தெரிகிறது மௌனத்தை உணர்ந்து கொள்ள தெரியாதவர்களுக்கு வீண்பழி சுமத்த முடிகிறது புரிந்து கொண்டால் கோபத்திற்கான நியாயம் தெரியும் புரியவில்லை என்றால் அன்பின் ஆழம் கூட தெரியாது காயங்களை மற்றவர்களுக்கு காட்டிகொள்ளாமல் உள்ளுக்குள் தன்னைத்தானே வருத்திக்கொண்டு புன்னகையோடு கடந்து செல்லும் மனிதர்களில் நானும் ஒருவன்

சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு

  விழித்துக்கொள் மனிதனே.. கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உன்னை மாற்றிக்கொள்..! ஆம்...! மனிதமில்லா உலகில் சொத்துக்களுக்கு இருக்கும்  மதிப்பு கூட  மனிதனின் சோகங்களுக்கு இருப்பதில்லை..! காசு பணத்திற்கு இருக்கும்  மதிப்பு கூட  மனிதனின்  கண்ணீர்  துளிகளுக்கு இருப்பதில்லை..! அடாவடி  மனிதர்களுக்கு  இருக்கும்  மதிப்பு கூட  அன்பானவர்களுக்கு இருப்பதில்லை..! விழித்துக்கொள் மனிதனே..! சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு அதை அன்றன்றே செலவு செய்துவிடு..! கண்ணீர் துளிகள் ஒன்றும் விலைமதிப்பற்றவையல்ல யாருக்கு வேண்டுமானாலும்  சிந்தி கொண்டிருக்க..! அன்பு ஒன்றும் அனாதையல்ல தகுதியற்றவரிடத்திலும்  காட்டி ஏமாந்து விட..! விழித்துக்கொள் மனிதனே..! இயந்திர  உலகிற்கு ஏற்ப இசைந்து வாழ  கற்றுக் கொள்..! மனிதாபிமானமற்ற உலகில் மனிதத்தை தேடி காலத்தை கடத்தாதே..! கடத்தினால்...! காலவிரயத்தோடு தொலைவதென்னவோ உன் வாழ்வியலே...!!

வாழ்க்கை

  வாழ்க்கை எப்போது அழகாகிறது உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா? மகிழ்ச்சியாக இருப்பதா? பணம் புகழைத்தேடி தலை தெறிக்க ஓடுவதா? தோல்விகளில் கற்றுக் கொள்வதா? வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா? தன்னலமற்ற அர்ப்பணிப்பா? தத்துவங்களின் அணிவகுப்பா?  இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம். தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை....