இடுகைகள்

மறக்காதீர்கள்

 வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துடக் கூடாது *நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போகும் போது, நம்மில் ஒருத்தர் முந்திக் கொண்டு காசு கொடுக்க முன் வந்தா, காரணம் அவருக்குப் பணக்காரர் என்ற திமிர் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அவர் அதிகமா மதிக்கிறார்னு அர்த்தம்*. *ஒரு தவறுக்கு, ஒருவர் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேக்கிறார்னா அவர் தான் தப்பு பண்ணிருக்கார்ன்னு அர்த்தமில்லை, ஈகோ(Ego) பெரிசில்ல; உறவு தான் பெரிசுன்னு அவர்  மதிக்கிறார்னு அர்த்தம்* *நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு ஒருவர் ஃபோன் / மெஸேஜ் பண்றார்னா அவர் வேலை வெட்டி இல்லாதவர்னு அர்த்தமில்லை, நாம் அவர் மனசில எப்பவும் இருக்கோம்னு அர்த்தம்*. *பின்னொரு காலத்தில் நம்ம புள்ளைங்க நம்ம கிட்ட கேட்கும் : யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்னு*. *ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்ல நேரலாம் : அவங்க கூடத் தான் சில நல்ல...

சோகம்

  எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான். கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது. இதற்கு தான் சொல்வார்கள் ...

அவமானம்

  *சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!* *என்னை* *நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்* *ஓர் ஆயுதம் தான் அவமானம்.* **இது உண்மை என்பது போல்,* *அனைவரின் வாழ்விலும்* *ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.* *நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,* *செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.* *அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.* *அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,* *பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!* *நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?* *மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,

கவலை

 கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.     கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.     கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்த...

பயம், பதற்றம்.தவிர்ப்பது எப்படி?

  சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்து கொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?! இங்கே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்! பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்து இருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும் போதோ, மாறும் போதோ அல்லது அதிலிருந்து விலகும் போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய் விடுகிறது. கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மன நலக் கேடுகளை விளைவிக்கிறது. பலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பினும், பெரும்பாலானோர் உதவி பெறுவதில்லை. பதற்றம் உடலுக்குக் கெடுதலா? ஓரளவு பதற்றம் நல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும் கூட! இது எதிர்பாராத ஆப...

நிதானம்

  உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான். நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள். இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூலக் காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம். கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை. கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.

பெறுமதி

  கருத்ததரங்கொன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றைத் தூக்கிப் பிடித்துச் சபையோருக்குக் காட்டினார். "இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?" என அவர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. பின்னர் அவர் மெழுகுவர்த்தியொன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. "இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார். சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர். "நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர், தனது கையிலிருந்த மோதிரத்தைக் கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார். பின்னர் அதனை உயர்த்திப் பிடித்து, "இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா?" எனக் கேட்டார். அப்போதும் சபையில் இருந்த அதிகமானோர் தம் கைகளை உயர்த்தினர். "சரி, இப்போது நான...